சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்து பொது மக்களுக்கு ஆச்சரியத்தை தந்திருக்கிறது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2000 ரூபாய்க்கு மேல் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் இந்த மூன்று நாட்களில் தங்கம் விலை எப்படி மாற்றம் அடைந்துள்ளது, இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 150 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 1,12,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 1,11,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு 1200 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.

சென்னை பொறுத்தவரை தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. திங்கட்கிழமை அன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து 14,230 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாயன்று 130 ரூபாய் விலை குறைந்து 14,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 150 ரூபாய் விலை குறைந்து 13,950 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரண தங்கம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கிராமுக்கு 280 ரூபாய் விலை குறைந்திருக்கிறது ஒரு சவரனுக்கு 2,240 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஈரான் போர்ர் தொடர்பான அறிவிப்புகளும் கச்சா எண்ணெய் விலை மாற்றமும் தான் தங்கத்தின் விலையில் மாற்றத்தை கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஈரான் போரில் அமைதியை நிலைநாட்டுவதற்கான பேச்சுவார்த்தை நடப்பது தொடர்பான எந்தவித பாசிட்டிவான முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. அதேவேளையில் ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இந்த இரண்டு காரணங்களாலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வு கண்டிருக்கின்றன இதனால் தங்கத்தின் விலை சரிவடைந்து இருக்கிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவடைந்தது தான் இந்தியாவில் சில்லறை விற்பனையில் தங்கத்தின் விலை குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

