அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்றைய தினம் தடாலடியாக குறைந்திருக்கிறது. தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
சென்னை பொறுத்தவரை அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே இருந்த தங்கம் இன்றைய தினம் சற்றே குறைந்திருக்கிறது . அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 10,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து படிப்படியாக உயர்ந்த தங்கம் அக்டோபர் 6ஆம் தேதி ஒரு கிராமுக்கு 11 ஆயிரம் ரூபாயை கடந்தது. ஆறாம் தேதி அன்று ஒரு கிராம் 11,125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து ஏறு முகத்திலேயே இருக்கும் தங்கம் இன்றைய தினம் சற்றே குறைந்திருக்கிறது. சென்னை பொறுத்தவரை நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராமுக்கு 165 ரூபாய் விலை குறைந்து 11,260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 91,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு , இன்று ஒரு சவரனுக்கு 1320 ரூபாய் விலை குறைந்து 90,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 1320 ரூபாய் குறைந்து இருப்பது சாமானிய மக்களுக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. தங்கம் விலை குறையட்டும் வாங்கலாம் என காத்திருந்தவர்களுக்கு இன்றைய தினம் நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து தங்கம் விலை குறையும் என காத்திருக்காமல் இந்த விலை குறைவு மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 12,464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் இன்று 180 ரூபாய் விலை குறைந்து 12,284 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 1440 ரூபாய் விலை குறைந்து 98,272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 125 ரூபாய் விலை குறைந்து 9,930 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது 1000 ரூபாய் விலை சரிந்து 74,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் 3 ரூபாய் விலை உயர்ந்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் விலை உயர்வு கண்டு 1,80,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று 161 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி இன்றைய தினம் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்றுவரை வெள்ளி ஒரு கிராமுக்கு 19 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications