சென்னை: 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏறுமுகத்திலேயே இருந்த தங்கம் விலை , ஆகஸ்ட் மாதத்தில் டிவிஸ்ட் அடித்திருக்கிறது. இந்த ஆண்டிலேயே இல்லாத அளவாக 10 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை உயராமல் இறங்குமுகமாகவே இருக்கிறது.
தொடர்ந்து குறையும் தங்கம் விலை: சென்னையில் நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சிறந்த மாதமாக அமைந்திருக்கிறது . ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 8ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 75, 760 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதனை அடுத்து தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. கடந்த ஒரு வார காலமாகவே தொடர்ந்து தங்கத்தின் விலை இறங்கு முகமாகத் தான் இருக்கிறது.

இன்று விலை என்ன: கடந்த 9ஆம் தேதி தொடங்கி இன்று வரை தங்கத்தின் விலை ஏறவில்லை. இது சாமானிய மக்களுக்கு சற்றே நிம்மதியை தந்துள்ளது. சென்னையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 9275 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் ஆபரண தங்கம் 74 ,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 கேரட் தங்கம்: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலையிலும் மாற்றம் இல்லை ஒரு சவரன் 10,118 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு சவரன் 80,944 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 7,670 ரூபாய்க்கும் ஒரு சவரன் 61,360 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை: வெள்ளி விலையை பொருத்தவரை 80 காசுகள் விலை உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 800 ரூபாய் விலை உயர்ந்த 1, 27,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தங்கம் தற்போது இறங்குமுகமாக இருப்பது நகை வாங்குவோருக்கு நிம்மதி தந்துள்ளது.தற்போது பண்டிகை காலம் தொடங்குவதால் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கம் வாங்குவார்கள். இந்த விலை குறைவு தொடர்ந்து நீடிக்குமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் விலை குறையுமா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்கத்தின் மீது வரி போட மாட்டேன் என அறிவித்து விட்டதால் தான் தங்கம் விலை குறைந்து வருகிறது. மேற்கொண்டு தங்கம் விலை குறையுமா என்றால் அதற்கு சர்வதேச பொருளாதார சூழல், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள், உக்ரைன் ரஷ்யா போர் உள்ளிட்டவை தான் பதில் கூற முடியும். இவற்றில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் தங்கம் விலையை மாற்றும்.மேற்கொண்டு தங்கம் விலை குறையுமா என காத்திருக்காமல் தற்போது ஏற்பட்டுள்ள விலை குறைவை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications