வரலாற்று உச்சத்தில் தங்கம்!! அக்டோபரில் மட்டும் ரூ.7,600 உயர்வு!! இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கலாமா?

தீபாவளி பண்டிகை நெருங்கக் கூடிய வேளையில் சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 95,000 ரூபாயை கடந்திருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் புதிய உச்சங்களை எட்டி வருகிறது.

தங்கம் விலை: தீபாவளி பண்டிகையில் உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பது, சர்வதேச காரணிகள் என அனைத்துமே தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு காரணமாகவே அமைந்திருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்றைய தினமும் உயர்வு கண்டிருக்கிறது. நேற்று 11 ,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 11,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வரலாற்று உச்சத்தில் தங்கம்!! அக்டோபரில் மட்டும் ரூ.7,600 உயர்வு!! இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்கலாமா?

ரூ.95,000ஐ கடந்தது: ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 320 ரூபாய் விலை உயர்ந்து 95,000 ரூபாயை கடந்திருக்கிறது. அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை 95,200 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. சென்னை பொறுத்தவரை ஆபரண தங்கத்தின் விலை அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து இன்று வரை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது.

அக்டோபரில் எவ்வளவு உயர்வு: அக்டோபர் 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10 ,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் ஒரு கிராம் 11,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரை சென்னையில் ஒரு கிராம் தங்கம் 950 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் என பார்க்கும்போது 7600 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.

24 கேரட் தங்கம்: 24 கேரட் தங்கமும் விலை உயர்ந்திருக்கிறது . நேற்று 12,938 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 44 ரூபாய் விலை உயர்வு கண்டு 12 ,982 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு சவரன் தங்கத்தை பொருத்தவரை 352 ரூபாய் விலை உயர்ந்து 1,03,856 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் 9,830 ரூபாய்க்கும் ஒரு சவரன் 78,640 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை: தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வந்த வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 206 ரூபாய்க்கும் ஒரு கிலோ 1000 ரூபாய் விலை குறைந்து 2,06,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் இன்று வரை வெள்ளி விலை கிராமுக்கு 45 ரூபாயும் , ஒரு கிலோவுக்கு 45,000 ரூபாயும் விலை உயர்வு கண்டுள்ளது.

தங்கம் வாங்கலாமா?: தங்கம், வெள்ளி விலை உயர்வு இந்த தீபாவளிக்கு அவற்றை வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தை கொண்டு வந்துள்ளது. நிபுணர்கள் கூற்றுப்படி தங்கம் விலை தற்போதைக்கு குறைய போவதில்லை. எனவே தங்கம் வாங்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு நகைகளுக்கு மாற்றாக கோல்டு ஈடிஎஃப், கோல்டு மியூச்சுவல் ஃபண்டு ஆகியவற்றிலும் டிஜிட்டல் கோல்டு முறையிலும் முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்குகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+