சென்னை: தங்கம் விலை ஒரு நாள் இறங்கினால் அடுத்த நாள் பல மடங்கு உயர்ந்து விடுகிறது. செப்டம்பர் மாதம் தொடங்கி தங்கம் விலை தற்போது வரை ஜெட் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் சரிவை கண்டது . இனி தொடர்ந்து தங்கம் விலை குறையும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்ட நிலையில் அடுத்த நாளான இன்று தங்கத்தின் விலை உயர்ந்து விட்டது.
இன்று தங்கம் விலை: சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 85 ரூபாய் விலை உயர்ந்து 11,425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 680 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 90 ,720 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 91,420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்த வேகத்தில் மீண்டும் ஏறி இருக்கிறது.

5 நாட்களில் எவ்வளவு: தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தங்கத்தின் விலை என்பது மாற்றி அமைக்கப்படுவதும் சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வார தொடக்கத்திலிருந்து பார்த்தோம் என்றால் தங்கத்தின் விலை திங்கட்கிழமையான ஆறாம் தேதி ஒரு கிராம் 11,125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்றைய தினம் ஒரு கிராம் 11,425 என இந்த ஐந்து நாட்கள் அளவிலேயே 300 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரனுக்கு என பார்த்தால் 2400 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது.
ரூ.1 லட்சமானது: 24 கேரட் தங்கத்தை பொறுத்த வரை ஒரு கிராம் 12,464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரனுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிட்டது. அதாவது 744 ரூபாய் உயர்ந்து 99,712 ரூபாய்க்கு விற்கப்படுகிறது 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கமும் ஒரு சவரன் 560 ரூபாய் விலை உயர்ந்து 75,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை தாறுமாறு: தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர்ந்த வண்ணம் இருக்கிறது . இன்றைய தினம் ஒரே நாளில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 3 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது நேற்று 184 ரூபாய் விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 187 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 1, 87,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அக்டோபர் 1ஆம் தேதி அன்று 1, 61,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி இன்றைய தினம் 1, 87,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications