தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போக்கை காட்டுகிறது .இரண்டு நாட்கள் திடீரென உயரும் தங்கம் பின்னர் சரிகிறது. பரவாயில்லை தங்கம் விலை குறைந்து வருகிறது என நாம் மகிழ்ச்சி அடைந்தால் அந்த மகிழ்ச்சி மறைவதற்குள் மீண்டும் விலை உயர்ந்து விடுகிறது.
தங்கம் விலை: சென்னையில் நேற்றைய தினம் குறைந்திருந்த தங்கம் விலை இன்றைய தினம் உயர்வு கண்டிருக்கிறது சென்னையில் அக்டோபர் 1ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 10,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 2ஆம் தேதி அன்று விலை மாற்றம் இல்லை . அக்டோபர் 3ஆம் தேதி அன்று ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து 10,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று விலை என்ன: இன்றைய தினம் தங்கத்தின் விலை 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 10,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு சவரன் 87,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று ஒரு சவரன் 400 ரூபாய் விலை உயர்வு கண்டு 87 , 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கத்தை பொருத்தவரை 500 ரூபாய் விலை உயர்ந்து 1,09,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நாளையும் இதே விலை: தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. குறிப்பாக ஒரே நாளில் இரண்டு முறை விலை உயரும் போக்குகளையும் நம்மால் பார்க்க முடிகிறது . ஆபரண தங்கத்தை பொறுத்தவரை சனிக்கிழமை அதுவுமாக விலை உயர்ந்திருப்பதால் ஞாயிற்றுக்கிழமை அன்றும் இதே விலைக்கு தான் தங்கம் விற்கப்படும்.
ஒரு சவரன் எவ்வளவு: சென்னை நிலவரத்தை பார்க்கும்போது 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 87 , 600 ரூபாய் தங்கத்தின் விலை இத்துடன் கூடுதலாக மூன்று சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் சுமார் 18 லிருந்து 20% வரை செலுத்த வேண்டியது இருக்கும் . எனவே ஒரு சவரன் நகை வாங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
24 கேரட் தங்கம்: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய விட இன்று 55 ரூபாய் விலை உயர்ந்து 11,946 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 440 ரூபாய் விலை உயர்ந்து 95 ,568 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,055 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு சவரனுக்கு 200 ரூபாய் என விலை உயர்ந்து 72,440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை: வெள்ளியின் விலையும் இன்று உயர்வு கண்டிருக்கிறது . ஒரு கிராம் 3 ரூபாய் விலை உயர்ந்து 165 ரூபாய்க்கும் ஒரு கிலோவிற்கு 3 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 1,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் சற்றே குறைந்திருந்த வெள்ளியின் விலை இன்று மீண்டும் பழையபடி உயர தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications