கைகொடுத்த தங்கம், காலை வாரிய வெள்ளி.. மக்கள் புலம்பல்..!

தங்கம், வெள்ளி விலை கடந்த ஒரு வருடத்தில் பெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ள காரணத்தால் ரீடைல் சந்தையில் இதை வாங்குபவர்களை காட்டிலும் ETF, கோல்டு ஈடிஎப் ஆகியவற்றின் வாயிலாகவே மக்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால் பெரும்பாலான மக்களின் எண்ணம் தற்போது கையில் இருக்கும் உலோக தங்கம், வெள்ளி விலை மீண்டும் உச்ச விலைக்கு திரும்புமா என்பது தான். இப்படி பார்க்கும் போது இன்று தங்கம் விலை கைகொடுத்தாலும், வெள்ளி விலை முதலீட்டாளர்களின் கால்களை வாரியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் வெள்ளி விலை பெரிய அளவில் உயர்ந்த காரணத்தால் மக்கள் தங்கத்தை காட்டிலும் வெள்ளியை அதிகமாக வாங்கிய நிலையில் இன்றைய விலை சரிவு அதிகப்படியான முதலீட்டாளர்களை பாதித்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக உயர்வு கண்டிருக்கிறது. அதேவேளையில் இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை இன்றைய தினம் சரிவை சந்தித்திருக்கிறது.

சென்னையில் கடந்த வாரம் சரிவு போக்கில் இருந்த தங்கம் விலை இந்த வாரம் முழுவதும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த 21ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி நேற்று, இன்று என தொடர்ந்து மூன்று வர்த்தக நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்தே வருகிறது. சனிக்கிழமை அன்று ஒரு 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 260 ரூபாய் விலை உயர்ந்து 14,680 ரூபாய்க்கு விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை அன்று விலையில் மாற்றமில்லை.

கைகொடுத்த தங்கம், காலை வாரிய வெள்ளி.. மக்கள் புலம்பல்..!

திங்கள்கிழமையான நேற்று 180 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 14,860 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து 14,890 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் இந்த மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 470 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது.

சென்னையில் நேற்றைய விட இன்று 240 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,19,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த மூன்று வர்த்தக நாட்களில் சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 3,760 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. 10 கிராம் தங்கத்தை பொருத்தவரை 1,48,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் கிராமுக்கு 33 ரூபாய் விலை உயர்ந்து 14,244 ரூபாய்க்கும் சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து 1,29, 952 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்து 12,730 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 1,01,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஏறுமுகமாக இருந்த வெள்ளியின் விலை இன்றைய தினம் சரிவடைந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று பத்து ரூபாய் விலை குறைந்து 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியை பொறுத்தவரை 10,000 ரூபாய் விலை சரிந்து 2,90,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்திருப்பதே சென்னையில் தங்கம் விலை உயர்வதற்கு காரணம். உலக சந்தேக பொறுத்த வரை ஒரு அவுன்ஸ் தங்கம் 5172 டாலர்களுக்கும் ஒரு அவுன்ஸ் வெள்ளி 87 டாலர்களுக்கும் விற்பனை ஆகிறது. இந்த வாரம் முழுவதுமே விலை நிலவரம் சற்றே ஏற்றத்துடனே இருக்கும் என நிபுண்ர்கள் கூறுகின்றனர். ஈரான் விவகாரம் பூதாகரமாகும் பட்சத்தில் தங்கம் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை நிலவரம்:

மும்பை: மும்பையில் 24 கேரட் தங்கம் ரூ.16,178-ஆக, 22 கேரட் ரூ.14,830-ஆக, 18 கேரட் ரூ.12,134-ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.285-ஆக, ஒரு கிலோ ரூ.2,85,000-ஆக இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.62,290-ஆக வர்த்தகமாகிறது.

டெல்லி: டெல்லியில் 24 கேரட் தங்கம் ரூ.16,193-ஆக, 22 கேரட் ரூ.14,845-ஆக, 18 கேரட் ரூ.12,149-ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.285-ஆக, ஒரு கிலோ ரூ.2,85,000-ஆக இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.62,290-ஆக உள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் 24 கேரட் ரூ.16,178-ஆக, 22 கேரட் ரூ.14,830-ஆக, 18 கேரட் ரூ.12,134-ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.285-ஆக, ஒரு கிலோ ரூ.2,85,000-ஆக இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.62,290-ஆக வர்த்தகமாகிறது.

பெங்களூர்: பெங்களூரில் 24 கேரட் ரூ.16,178-ஆக, 22 கேரட் ரூ.14,830-ஆக, 18 கேரட் ரூ.12,134-ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.285-ஆக, ஒரு கிலோ ரூ.2,85,000-ஆக இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.62,290-ஆக உள்ளது.

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 24 கேரட் ரூ.16,178-ஆக, 22 கேரட் ரூ.14,830-ஆக, 18 கேரட் ரூ.12,134-ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.290-ஆக, ஒரு கிலோ ரூ.2,90,000-ஆக இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.62,290-ஆக உள்ளது.

கேரளா: கேரளாவில் 24 கேரட் ரூ.16,178-ஆக, 22 கேரட் ரூ.14,830-ஆக, 18 கேரட் ரூ.12,134-ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.290-ஆக, ஒரு கிலோ ரூ.2,90,000-ஆக இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.62,290-ஆக வர்த்தகமாகிறது.

புனே: புனேயில் 24 கேரட் ரூ.16,178-ஆக, 22 கேரட் ரூ.14,830-ஆக, 18 கேரட் ரூ.12,134-ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.285-ஆக, ஒரு கிலோ ரூ.2,85,000-ஆக இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.62,290-ஆக உள்ளது.

வடோதரா: வடோதராவில் 24 கேரட் ரூ.16,183-ஆக, 22 கேரட் ரூ.14,835-ஆக, 18 கேரட் ரூ.12,139-ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.285-ஆக, ஒரு கிலோ ரூ.2,85,000-ஆக இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.62,290-ஆக உள்ளது.

அகமதாபாத்: அகமதாபாத்தில் 24 கேரட் ரூ.16,183-ஆக, 22 கேரட் ரூ.14,835-ஆக, 18 கேரட் ரூ.12,139-ஆக உள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.285-ஆக, ஒரு கிலோ ரூ.2,85,000-ஆக இருக்கிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.62,290-ஆக வர்த்தகமாகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+