சென்னையில் அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை பல வரலாறு காணாத உச்சங்களை தொட்டது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
இன்று விலை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்து 11,540 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் விலை உயர்ந்து 92,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அக்டோபர் 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 10950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு சவரன் தங்கம் 87,600 ரூபாய்க்கு விற்பனையானது.

அக்டோபரில் உச்சம்: இதனை அடுத்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தங்கம் அக்டோபர் 6ஆம் தேதி அன்று ஒரு கிராமுக்கு 11 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையானது . அக்டோபர் 17ஆம் தேதி அன்று வரலாற்று இல்லாத உச்சமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12,200 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை 97,600 ரூபாய் என வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
ரூ.5000 வரை சரிவு: இதனை அடுத்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் கணிசமான விலை குறைவை காண முடிந்தது. அக்டோபர் 21ஆம் தேதி 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களும் படிப்படியாக விலை குறைந்து 11,500 என ஆனது இத்தகைய சூழலில் இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 11,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம்: தங்கம் அதன் வரலாற்று உச்சமான 12,200 ரூபாயிலிருந்து ஒரு கிராமுக்கு 11,540 ரூபாய் அதாவது ஒரு கிராமுக்கு 660 ரூபாய் சரிவடைந்து இருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது கிட்டத்தட்ட 5280 ரூபாய் வரை விலை குறைந்திருக்கிறது. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,589 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,00,712 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராம் 9,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 76 ,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது .
வெள்ளி: ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு மூன்று ரூபாய் சரிந்து 171 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து 1, 71,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராம் 207 ரூபாய் என அக்டோபர் 15ஆம் தேதி உச்சம் கண்டது. இதன் பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 171 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 36 ரூபாயும் கிலோவுக்கு 36,000 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
மேலும் விலை குறையுமா: தங்கம் அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து விலை குறைய காரணம் என்ன மேலும் விலை குறையுமா இப்போது தங்கம் வாங்கலாமா என முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த சூழலில் தங்கம் விலை உச்சத்தை எட்டியதால் முதலீட்டாளர்கள் அதனை விற்று லாபம் பார்த்தது தங்கம் விலை சரிய முக்கிய காரணமாகும். அதே போல அமெரிக்க அரசின் பணவீக்க விகித அறிக்கைக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்துள்ளது என அறிக்கை வந்தால் அடுத்த கட்டமாக அந்த நாட்டு மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை கையில் எடுக்கும். இந்த வட்டி குறைப்பு பத்திர முதலீட்டாளர்களை மீண்டும் தங்கத்தை நோக்கி திரும்ப வைக்கும். எனவே மீண்டும் தங்கம் விலை உயர்வை இது ஏற்படுத்தும், எனவே அடுத்ததாக தங்கம் விலை உயருமா இல்லை சரியுமா என்பது அமெரிக்கா வெளியிட கூடிய பணவீக்க தரவுகளை பொறுத்து தான் அமையும். அடுத்த வாரம் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்தில் வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகுமா இல்லையா என்பதை இந்த தரவுகள் தீர்மானிக்க போகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?



Click it and Unblock the Notifications