காலையில் உயர்ந்து, மாலையில் சரிந்த தங்கம்!! சவரனுக்கு ரூ.1120 குறைந்தது.. நாளை என்ன ஆகும்?

சென்னையில் அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை பல வரலாறு காணாத உச்சங்களை தொட்டது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 40 ரூபாய் விலை உயர்ந்து 11,540 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் விலை உயர்ந்து 92,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பிற்பகலில் கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே வேளையில் சவரனுக்கு 1120 ரூபாய் குறைந்து 91,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

காலையில் உயர்ந்து, மாலையில் சரிந்த தங்கம்!! சவரனுக்கு ரூ.1120 குறைந்தது.. நாளை என்ன ஆகும்?

இன்று காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் கணிசமான அளவு விலை குறைந்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 10950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு சவரன் தங்கம் 87,600 ரூபாய்க்கு விற்பனையானது.

இதனை அடுத்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தங்கம் அக்டோபர் 6ஆம் தேதி அன்று ஒரு கிராமுக்கு 11 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையானது . அக்டோபர் 17ஆம் தேதி அன்று வரலாற்று இல்லாத உச்சமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12,200 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது அதாவது ஒரு சவரன் தங்கத்தின் விலை 97,600 ரூபாய் என வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

இதனை அடுத்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் கணிசமான விலை குறைவை காண முடிந்தது. அக்டோபர் 21ஆம் தேதி 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களும் படிப்படியாக விலை குறைந்து 11,500 என ஆனது இத்தகைய சூழலில் இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 11,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் அதன் வரலாற்று உச்சமான 12,200 ரூபாயிலிருந்து ஒரு கிராமுக்கு 11,400 ரூபாய் அதாவது ஒரு கிராமுக்கு 800 ரூபாய் சரிவடைந்து இருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது கிட்டத்தட்ட 6,400 ரூபாய் வரை விலை குறைந்திருக்கிறது. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,437 ரூபாய்க்கும் ஒரு சவரன் 99,496 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராம் 9,252 ரூபாய்க்கும், ஒரு சவரன் 76 ,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது .

ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு 4 ரூபாய் சரிந்து 170 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்து 1, 70,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராம் 207 ரூபாய் என அக்டோபர் 15ஆம் தேதி உச்சம் கண்டது. இதன் பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து விலை குறைய காரணம் என்ன மேலும் விலை குறையுமா இப்போது தங்கம் வாங்கலாமா என முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த சூழலில் தங்கம் விலை உச்சத்தை எட்டியதால் முதலீட்டாளர்கள் அதனை விற்று லாபம் பார்த்தது தங்கம் விலை சரிய முக்கிய காரணமாகும். அதே போல அமெரிக்க அரசின் பணவீக்க விகித அறிக்கைக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்துள்ளது என அறிக்கை வந்தால் அடுத்த கட்டமாக அந்த நாட்டு மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை கையில் எடுக்கும். இந்த வட்டி குறைப்பு பத்திர முதலீட்டாளர்களை மீண்டும் தங்கத்தை நோக்கி திரும்ப வைக்கும். எனவே மீண்டும் தங்கம் விலை உயர்வை இது ஏற்படுத்தும், எனவே அடுத்ததாக தங்கம் விலை உயருமா இல்லை சரியுமா என்பது அமெரிக்கா வெளியிட கூடிய பணவீக்க தரவுகளை பொறுத்து தான் அமையும். அடுத்த வாரம் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்தில் வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகுமா இல்லையா என்பதை இந்த தரவுகள் தீர்மானிக்க போகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+