சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்த வண்ணமே இருக்கிறது. தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டுவது சாமானிய மக்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இன்று விலை என்ன: சென்னையை பொருத்தவரை ஆபரண தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்றைய விட இன்று கிராமுக்கு 90 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 10,060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 10,150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 80,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இன்று 720 ரூபாய் விலை உயர்வு கண்டு 81 ,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

9 நாட்களில் தாறுமாறு: சென்னையில் ஆபரண தங்கம் இப்படி வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருப்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது .செப்டம்பர் 1ஆம் தேதி முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் தான் இருந்து வருகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 9,705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்றைய தினம் 10,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 445 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது ஒரு சவரன் என பார்க்கும்போது இந்த ஒன்பது நாட்களில் மட்டும் 3,560 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது .
24 கேரட் தங்கம்: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 98 ரூபாய் விலை உயர்ந்து 11,073 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் 784 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கம் 88,584 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.18 கேரட் தங்கம் ஒரே நாளில் 1,714 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 8405 ரூபாய்க்கும் சவரனுக்கு இதுவரை இல்லாத அளவாக 67, 240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை: தங்கத்தின் விலை இப்படி தாறுமாறாக உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு தொடர்ந்து கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி தற்போது வரை இந்த ஒன்பது நாட்களில் ஏழு நாட்கள் தங்கம் விலை உயர்ந்து தான் வந்திருக்கிறது. வெள்ளியை பொருத்தவரை இன்றைய தினம் ஒரு கிராம் 140 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 1, 40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பவுன் நகை: ஆபரணத் தங்கத்தின் விலை 81 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. எனவே தங்கத்தை நகையாக வாங்க கூடிய நபர்கள் இத்துடன் செய்கூலி செய்தாரம் ஜிஎஸ்டி உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து 92 ஆயிரம் ரூபாய் வரை சராசரியாக செலுத்த வேண்டி இருக்கும். ஒரு பவுன் நகைக்கு 92,000 ரூபாய் என்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகப்பெரிய தொகை.
விலை குறையுமா?: இந்த சூழலில் தான் தங்கத்தின் இந்த விலை உயர்வு தொடர்ந்து இப்படியே நீடிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது. வரும் 16, 17 ஆகிய தேதிகளில் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வட்டி குறைப்பு தொடர்பான சில அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த அறிவிப்பு தங்கத்தின் விலை குறைவுக்கு வழிவகுக்கும். ஆனால் பெரிய அளவில் தங்கம் விலை குறையாது என்றே நிபுணர்கள் கணிக்கின்றனர். உலக பொருளாதார சூழல், அமெரிக்க வரி விதிப்பு பல்வேறு நாடுகளுக்கு இடையிலான புவி சார் மோதல்கள் ஆகியவை முடிவுக்கு வந்தால் தான் பெரிய அளவில் தங்கத்தின் விலை குறையும். ஆனால் அதற்கான அறிகுறிகளே இல்லை என்பதால் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக உள்ளன.


Click it and Unblock the Notifications