சென்னையில் நேற்று விலை குறைந்த தங்கம் இன்று ஒரே நாளில் அதை விட பல மடங்கு உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 74,000 ரூபாயை கடந்து விற்பனை செய்கிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்திருப்பது சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கம் விலை: சர்வதேச பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கும் இறக்குமதி வரியை அறிவித்திருக்கிறார.் குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார் . அவருடைய இந்த அறிவிப்பு தங்கம் விலையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.

ஆபரணத் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் 9,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அது ஒரே நாளில் கிராமுக்கு 140 ரூபாய் உயர்வு கண்டு 9,290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . அதே போல ஒரு சவரன் தங்கம் நேற்றைய தினம் 73,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது , இன்று சவரனுக்கு 11,20 ரூபாய் விலை உயர்வு கண்டு 74 , 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் 74 ஆயிரம் ரூபாயை கடந்திருக்கிறது.
வார இறுதிநாளில் விலை உயர்வு: சனிக்கிழமை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நாளைய தினமும் விலை மாறாமல் விற்பனையாகும். திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கும் வரை இதே விலை தான் நீடிக்கும். எனவே வார இறுதி நாள் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை தந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலை: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய தினம் ஒரு கிராம் 9,982 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்றைய தினம் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 10,000 ரூபாய் கடந்து 10,135 என கிராமுக்கு 153 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கம் என பார்க்கும் போது 24 கேரட் தங்கம் நேற்று 79,856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு 1224 ரூபாய் விலை உயர்ந்து 81 ,080 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது .
18 கேரட் தங்கம் கிராம் 7,680 ரூபாய்க்கும், ஒரு சவரன் 61,440 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.வெள்ளியை பொருத்தவரை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி 123 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,23,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications