சென்னை: சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று லேசான உயர்வை கண்டிருக்கிறது. செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே இருக்கிறது.
இன்று தங்கம் விலை: செப்டம்பர் மாதத்தில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 10,000 ரூபாயும், சவரனுக்கு 80,000 ரூபாயும் கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. நேற்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் 10,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . இன்று அது ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்து 10,230 ரூபாய்க்கு விற்பனையாகிறது . ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று 81, 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 80 ரூபாய் விலை உயர்வு கண்டு 81 ,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

5 நாட்களில் விலை: சென்னையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்றுவரையிலான ஐந்து நாட்களில் தங்கத்தின் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். 15ஆம் தேதியான திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 10,210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து 16ஆம் தேதி அன்று ஒரு கிராமுக்கு 70 ரூபாய் என அதிரடியாக விலை உயர்ந்து 10,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 17ஆம் தேதி அன்று தங்கம் ஒரு கிராமுக்கு பத்து ரூபாய் விலை குறைந்து 10,270 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றைய தினம் ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து 10,220 விற்பனை செய்யப்பட்டது. இன்று பத்து ரூபாய் விலை உயர்ந்து 10,230 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சவரனுக்கு எவ்வளவு: திங்கட்கிழமை தொடங்கி இன்று வரையிலான இந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை பார்க்கும்போது கிராமுக்கு 20 ரூபாயும் சவரனுக்கு 160 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது. தங்கம் ஒரு சவரன் இன்னும் 81 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் விற்பனை ஆகிறது. இரண்டு நாட்கள் குறைந்த தங்கம் இன்று லேசான விலை உயர்வு கண்டுள்ளது.
வெள்ளி விலை: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,160 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89 ,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 8,470 ரூபாய்க்கும் ஒரு சவரன் 67 ,760 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது . இன்றைய தினம் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி இரண்டு ரூபாய் விலை உயர்ந்தது ஒரு கிராம் 143 ரூபாயாகவும், ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் விலை உயர்ந்து 1,43,000 ரூபாய் என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெற்ற செப்டம்பர் 17,18 ஆகிய இரண்டு நாட்களிலும் தங்கம் விலை குறைந்தது. இந்நிலையில் இன்று லேசான உயர்வு கண்டுள்ளது. தங்கத்தின் விலை மேற்கொண்டு எப்படி இருக்கும் என்பதை அடுத்தடுத்த நாட்களில் அதன் போக்கை கொண்டு கணித்துவிடலாம்.


Click it and Unblock the Notifications