தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை.. திடீரென அடித்த டிவிஸ்ட்.. உடனே கடைக்கு போங்க!!

சென்னை: செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரை ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிவிட்டது . ஒரு பவுன் தங்கம் 81,000 ரூபாய் என்ற விலையை கடந்து சாமானிய மக்களுக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது . இனி ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் கட்டாயம் 91,000 ரூபாய்க்கு மேல் தேவை என்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது.

தங்கம் விலை: சென்னையில் கடந்த 8ஆம் தேதியான திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 10,060 ரூபாயாக இருந்தது இதனை அடுத்து ஒன்பதாம் தேதி 10,150 ரூபாய் என விலை உயர்ந்தது. 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களிலும் விலை மாறாமல் அப்படியே இருந்தது. இந்த சூழலில் நேற்றைய தினம் 90 ரூபாய் விலை உயர்வு கண்டு ஒரு கிராம் 10,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை.. திடீரென அடித்த டிவிஸ்ட்.. உடனே கடைக்கு போங்க!!

இன்று விலை என்ன: இப்படி தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தங்கம் இன்றைய தினம் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு கிராம் 20 ரூபாய் விலை குறைந்திருக்கிறது . சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 10,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . அதே வேளையில் ஒரு சவரன் தங்கம் நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று 160 ரூபாய் விலை குறைவு கண்டு 81,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாளையும் இதே விலை தான்: சனிக்கிழமையான இன்று தங்கம் விலை குறைந்து இருப்பதால் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையும் இதே விலைக்கு தான் விற்பனை செய்யப்படும். திங்கட்கிழமை விலை என்ன ஆகும் என்று நம்மால் கணிக்க முடியாது என்பதால் இந்த விலை குறைவை பயன்படுத்தி தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

6 நாட்களில் எவ்வளவு உயர்வு: கடந்த திங்கள் முதல் இன்று வரையிலான இந்த ஆறு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம், கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது , ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் என ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்றைய தினம் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,171 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,368 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேர தங்கம் ஒரு கிராம் 8,460 ரூபாய்க்கும் ஒரு சவரன் 67,680 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை: சென்னையில் வெள்ளி விலையும் மாற்றம் கண்டு இருக்கிறது ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் விலை உயர்ந்த 143 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் விலை உயர்ந்து 1, 43,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை என்பது எப்பொழுதுமே சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தான் மாற்றம் காண்கிறது. உலக பொருளாதார மந்த நிலை, பல்வேறு நாடுகளுக்கு இடையிலான புவிசார் பதற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு , அமெரிக்க அரசின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருந்து வருகின்றன.

அடுத்த வாரம் விலை உயருமா: இதனிடையே மேலும் சில மாதங்களுக்கு தங்கத்தின் விலை உயர்விலே தான் இருக்கும் என நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். தங்கத்தின் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய் என்ற நிலையை கூட எட்டலாம் என சொல்லப்படுவதால் மக்கள் விலை குறையும்போது அந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு தங்கத்தை வாங்கி வைப்பது தான் சிறந்த ஒரு முடிவாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+