தங்கம் விலை என்னாச்சு..? ஏறுதா இறங்குதா..?

கொரோனா வைரஸ் வந்ததால் விலை ஏற்றம் காணும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று தான் நம் எல்லோருக்கும் பிடித்தமான தங்கம்.

கடந்த 3 மாத காலத்தில் மட்டும் தங்கம் சுமாராக 13 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சரி இப்போது தங்கத்தின் விலை நிலவரம் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம். முதலில் தங்கம் விலை ஏற்றக் காரணிகளைப் பார்த்துவிடுவோம். அதன் பின் சர்வதேச விலை நிலவரத்தில் இருந்து தொடங்குவோம்.

தங்கம் விலை ஏற்றக் காரணங்கள்

தங்கம் விலை ஏற்றக் காரணங்கள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் 76.09 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது, ரெசசன் பயம், கொரோனாவால் சீர் குலையும் உலக பொருளாதாரம், பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் மீண்டும் தங்கத்தின் விலை மெல்ல அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

சர்வதேசத்தில் தங்கம்

சர்வதேசத்தில் தங்கம்

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக மெல்ல சரிந்தது என்றாலும், இன்று ஏப்ரல் 02, 2020-ல், மெல்ல மேல் நோக்கி விலை ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. கடந்த மார்ச் 19 அன்று 1,471 டாலருக்கு வர்த்தகமான தங்கம், அதன் பின் ஒரு உச்ச விலையாக மார்ச் 24 அன்று 1,632 டாலரைத் தொட்டது.

தற்போதைய விலை

தற்போதைய விலை

இந்த மார்ச் 24 விலை ஏற்றத்துக்குப் பின் மெல்ல சர்வதேச தங்கம் விலை 1,632 டாலரில் இருந்து சரிந்து நேற்று 1,585 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆனால் இன்று 1,599 டாலர் வரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சர்வதேச தங்கம். சர்வதேச அளவில் கொரோனா பயத்தாலும், பங்குச் சந்தைகள் சரிவாலும், தொடர் வட்டி விகித குறைப்பாலும் சர்வதேச தங்கம் விலை ஏறத் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது.

தங்கம் ஃப்யூச்சர்

தங்கம் ஃப்யூச்சர்

இந்தியாவின் எம் சி எக்ஸ் கமாடிட்டி சந்தையில், கடந்த மார்ச் 16 அன்று 38,400 ரூபாய்க்கு வர்த்தகமானது 10 கிராம் தங்கத்துக்கான ஃப்யூச்சர் காண்டிராக்ட். அதன் பின் சர்வதேச தங்கம் விலை ஏற்றத்தால் 10 கிராம் தங்க ஃப்யூச்சர்ஸின் விலையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

நேற்று என்ன

நேற்று என்ன

கடந்த மார்ச் 16 முதல் மார்ச் 26 வரை 10 கிராம் தங்க ஃப்யூச்சர்ஸின் விலை அதிகபட்சமாக சுமார் 44,535 ரூபாயைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின் மெல்ல விலை இறங்கி, நேற்று குறைந்த பட்சமாக 40,080 ரூபாயைத் தொட்டது. ஆனால், நேற்று வர்த்தக நேர முடிவில் 43,500 ரூபாயைத் தொட்டு நிறைவடைந்து இருக்கிறது. ஆக நாளை தங்கத்தின் விலை எம் சி எக்ஸ் சந்தையில் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.

ஆபரணத் தங்கம்

ஆபரணத் தங்கம்

சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மார்ச் 27 அன்று 45,300 என ஒரு உச்ச விலையில் இருந்தது. அதற்கு அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்து தங்கத்தின் விலை இறக்கம் கண்டது. ஆனால் இன்று ஏப்ரல் 02, 2020 வியாழக் கிழமை 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கொஞ்சம் அதிகரித்து 43,090 ரூபாய்க்கு விற்பனை ஆகிறதாம்.

சென்னை தங்கம் விலை ஏற்றக் காரணங்கள்

சென்னை தங்கம் விலை ஏற்றக் காரணங்கள்

நாம் ஏற்கனவே சொன்னது போல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாயைத் தொட்டு இருப்பதால், அதிக ரூபாய் கொடுத்து தான் டாலரை வாங்க வேண்டி இருக்கிறது. அதன் பிறகு, அந்த டாலரைக் கொடுத்து தான் தங்கத்தை வாங்க வேண்டி இருக்கும். எனவே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+