புதிய உச்சத்தில் தங்கம்! இனி ரூ. 1 லட்சம் இருந்தா தான் ஒரு பவுன்!! வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்வு!

சென்னை: செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஒவ்வொரு உச்சத்தை எட்டி வருகிறது. தற்போது தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியும் விலை உயர்ந்து வருவது சாதாரண மக்களுக்கு கண்ணீரை வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தங்கம், வெள்ளி: இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே கலாச்சார ரீதியாக தொடர்பு கொண்டவை. வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. தங்கம் ஆபரணமாகவும் வெள்ளியை நாம் பொருட்களாகவும் வாங்கி பயன்படுத்துகிறோம் . இத்தகைய சூழலில் தான் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு என்பது சாதாரண மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

புதிய உச்சத்தில் தங்கம்! இனி ரூ. 1 லட்சம் இருந்தா தான் ஒரு பவுன்!! வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்வு!

ஒரு சவரன்: சென்னையை பொருத்தவரை ஆபரண தங்கம் இன்றைய தினம் 84,000 ரூபாயை தொட்டுவிட்டது. அதாவது ஒரு சவரன் ஆவண தங்கம் 84,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாம் கடையில் சென்று ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் அத்துடன் ஜிஎஸ்டி செய்கூலி சேதாரம் சேர்த்து குறைந்தது 95 ஆயிரம் ரூபாயாவது செலுத்த வேண்டும். நகையின் டிசைன் உள்ளிட்டவற்றை பொறுத்து செய்கூலி சேதாரம் அதிகமாக இருந்தால் சராசரியாக ஒரு பவுனுக்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தங்கம் விலை என்பது உயர்ந்த நிற்கிறது .

இன்று விலை: இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 10,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 10,500 ரூபாய்க்கு விற்கப்படுகிற. ஒரு சவரன் தங்கம் நேற்று 83,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று 560 ரூபாய் விலை உயர்ந்து 84 ,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2 நாட்களில் உயர்வு: இரண்டு நாட்களிலேயே தங்கத்தின் விலை கிராமுக்கு 210 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1680 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது. கடந்த ஐந்து நாட்களில் என பார்த்தால் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் 10,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்றைய தினம் 10,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 நாட்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு 270 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2,360 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.

24 கேரட் தங்கம்: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,405 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் தங்கம் 616 ரூபாய் விலை உயர்ந்து 91,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . 18 கிராம் தங்கமும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை உயர்ந்து 8,700 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 480 ரூபாய் விலை உயர்ந்து 69 ,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி: தங்கம் தான் இப்படி விலை உயர்கிறது என்றால் ஏழைகளின் தங்கம் என அழைக்கப்படும் வெள்ளியின் விலையும் கண்ணீரை வரவழைக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் விலை உயர்ந்து 149 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 1,49,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொருத்தவரை கடந்த ஐந்து நாட்களில் மட்டும் கிராமுக்கு ஆறு ரூபாயும் ஒரு கிலோவுக்கு 6000 ரூபாயும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை குறையுமா: தங்கம் விலை இப்படி உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால் நிபுணர்கள் தற்போதைக்கு தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிவிக்கின்றனர். ஏனெனில் தங்கம் விலை உயர்வுக்கு காரணமான சர்வதேச காரணிகள் அப்படியே நீடிப்பதால் அடுத்த சில மாதங்களுக்கு விலை குறைவதற்கான அறிகுறிகள் இல்லை என்றே தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+