சென்னை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்திலே தான் இருந்து வருகிறது. சென்னையை பொருத்தவரை இன்றைய தினம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு வரலாறு காணாத உச்சத்தை எட்டி சாதாரண மக்களை தலைசுற்ற வைத்திருக்கிறது.
தங்கம் விலை: செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தினம் தினம் புதிய வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை சற்றே குறைந்த நிலையில் இன்று அதைவிட பல மடங்கு உயர்ந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 10,210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்று 70 ரூபாய் இருந்து 10,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு பவுன் எவ்வளவு: ஒரு சவரன் தங்கம் நேற்று 81,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது , இன்று 560 ரூபாய் விலை உயர்வு கண்டு 82,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் 82 ஆயிரம் ரூபாயை கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. சாதாரண மக்கள் ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட தங்கத்தின் விலையோடு சேர்த்து செய்கூலி செய்தாரம் ஜிஎஸ்டி ஆகியவை அனைத்தும் சேர்ந்தால் கிட்டத்தட்ட 95 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டியது இருக்கும் .
செப்டம்பரில் எவ்வளவு உயர்வு: சென்னை பொறுத்தவரை வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று ஒரு கிராம் 10,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அன்று விலை மாற்றம் இல்லாமல் இருந்தது செப்டம்பர் 15ஆம் தேதியான நேற்று பத்து ரூபாய் விலை குறைந்து 10,210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் அது 10,280 ரூபாயாக விலை உயர்வு கண்டிருக்கிறது.செப்டம்பர் 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் 9,705 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்று 10,280 என ஒரு கிராமுக்கு 575 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது அப்படி என்றால் ஒரு சவரனுக்கு தங்கம் 4600 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
வெள்ளி விலை:24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,215 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 8,515 ரூபாய்க்கும் ஒரு சவரன் 68,120 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது . ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் விலை உயர்ந்து 144 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளிக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1,44,000 ரூபாயாகவும் இருக்கிறது .
தங்கம் விலை மேலும் உயருமா: அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து வருவது , அமெரிக்காவின் கருவூல லாப ஈவு வட்டி விகிதங்கள் சரிந்தது ஆகிய இரண்டும் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் ஈர்த்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் குறித்த எதிர்பார்ப்பும் தங்கத்தின் விலை அதிகரிக்கச் செய்திருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பில் ஈடுபட்டால் தங்கம் விலை மேலும் உயரும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications