சென்னை: இந்திய மக்களின் முக்கிய முதலீடுகளில் ஒன்று தங்கம் வாங்குவது. பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களும், தங்கத்தில் முதலீடு செய்வதை லாபகரமானதாகக் கருதுகின்றனர். என்னதான் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களில் சென்று கொண்டிருந்தாலும், அவற்றை விரும்பி வாங்கும் மக்களின் எண்ணிக்கை எப்போதும் குறைவதே இல்லை. இந்தப் பதிவில் ஆகஸ்ட் 10-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி கோவை மதுரையில் தங்கம் விலையைப் பார்ப்போம்.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,031 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,445 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 5,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் அதிகரித்து 51,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 176 ரூபாய் அதிகரித்து 56,648 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியானாலும், சுங்கவரி குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் பலருக்கும் நிம்மதி அளிக்கும் ஒன்றாக இருந்தது. அதன்படி சுங்க கட்டணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டதால் தங்கத்தின் விலையில் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக பட்ஜெட் நாளிலிருந்து இன்று வரை 350 ரூபாய் வரை தங்க விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் நேற்று தங்கம் விலை 75 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில் இன்று 20 ரூபாய் அதிகரித்துள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,031 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,445 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஜூலை 23-ஆம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தங்க விலையில் குறைவு ஏற்பட்டு வந்தாலும், இன்று 20 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றும் 70 ரூபாய் அதிகரித்திருந்தது.

ஆனால் இந்த மாதத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று தங்கம் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. இது கடந்த மாதங்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று மட்டும் 6,330 ரூபாய்க்கு 1 கிராம் 22 கேரட் தங்கம் விற்கப்பட்டது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் 6,906 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொதுவாக ஆடி மாதங்களில் திருமணங்கள் எதுவும் நடக்காது. ஆனால் இனி வரும் மாதங்கள் திருமணம் சீசன் என்பதால், தங்கம் விலையில் இதே போன்ற ஏற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் விலை குறைவான நாட்களை பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications