சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து இருக்கிறது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்தது, கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 11520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்ததால் இந்த வாரம் முழுவதும் இதே போன்ற ஒரு போக்குதான் நீடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது . அதே விலை உயர்வு இன்றும் நீடிக்கிறது என்பதால் இனி தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் இருக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்திருக்கிறது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்று 80 ரூபாய் விலை உயர்ந்து 11800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று 93,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 94 ,000 ரூபாயை கடந்து 94,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . நேற்றைய விட இன்று தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
கோவை,மதுரை, திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 280 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2240 ரூபாயும் உயர்வு கண்டிருக்கிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 87 ரூபாய் விலை உயர்ந்து இருக்கிறது. நேற்று 12, 786 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் இன்று 12,873 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 696 ரூபாய் விலை உயர்ந்து 1,02,984 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கம் நேற்று கிராம் 9,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 65 ரூபாய் விலை உயர்ந்து 9,845 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 78 ,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது . தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற கணிப்புதான் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
வெள்ளியும் இன்று விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 74 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 2 ரூபாய் இருந்து 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் விலை உயர்ந்து 1,76,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . கடந்த இரண்டு நாட்களில் வெள்ளியின் விலை கிராமுக்கு ஐந்து ரூபாயும் கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?



Click it and Unblock the Notifications