சென்னை: தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் இந்த மாதத்திலே இல்லாத உச்சத்தை இன்று அடைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் மீண்டும் 74 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஆபரணத்தங்கம்: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 840 உயர்ந்து, மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது. வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 105 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. நேற்று 9,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 9,285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் ரூ.74,000ஐ கடந்தது: 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ஒரே நாளில் 840 உயர்ந்திருக்கிறது. நேற்று 73,440க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்றைய தினம் 74 ,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீண்டும் ஒரு சவரன் தங்கம் 74,000 ரூபாயை கடந்து இருப்பது சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த போதிலும் இன்று ஒரே நாளில் அதிகபட்ச விலை உயர்வு கண்டிருக்கிறது.
5 நாட்களாக விலை உயர்வு: கடந்த ஐந்து நாட்கள் என பார்க்கும்போது வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஒரு கிராமுக்கு தலா ஐந்து ரூபாய் என தங்கம் விலை உயர்ந்தது. இதனை அடுத்து வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு 60 ரூபாய் உயர்வு கண்டது. நேற்றைய தினம் 10 ரூபாய் என உயர்வு கண்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 150 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இந்த ஐந்து நாட்களில் மட்டும் பார்க்கும்போது தங்கத்தின் விலை சவரனுக்கு 1480 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.
24 கேரட் தங்கம்: 24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராமுக்கு 114 ரூபாய் விலை உயர்ந்து 10,129 ரூபாய்க்கும் சவரனுக்கு 912 ரூபாய் விலை உயர்ந்து 81 ,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு 81,000ஐ கடந்து விற்பனையாகிறது. அதே போல 18 கேரட் தங்கம் கிராமுக்கு 90 ரூபாய் விலை உயர்ந்து 7560 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 720 ரூபாய் விலை உயர்ந்து 61,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை : தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியும் விலை உயர்வு கண்டு வருகிறது. ஒரே நாளில் வெள்ளி ஒரு கிராமுக்கு 2 ரூபாய் விலை உயர்ந்து, 128 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது . ஒரு கிலோ வெள்ளியை பொருத்தவரை 2000 ரூபாய் விலை உயர்ந்து 1, 28,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஐந்து நாட்கள் என பார்க்கும்போது வெள்ளியின் விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்திருக்கிறது கிலோவுக்கு 4,000 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications