தமிழ்நாட்டில் பெரும்பாலும் தங்கம் விலை ஆனது சமீபகாலமாக அதிகரித்து கொண்டே செல்கிறது. அதன்படி, கடந்த வாரத்தில் சவரனுக்கு ரூ.1000 வரையிலும் விலை ஏறியது. வரும் தினங்களில் சுபமூகூர்த்த தினங்கள் வரிசையாக வரவுள்ளது. இந்த சமயத்தில் தங்கம் விலை ஆனது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் தங்கம் வாங்குவோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று சவரனுக்கு 22 காரட் தங்கம் ஆனது சுமார் 840 ரூபாய் வரை உயர்ந்தது.
அதன்படி, நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7,705 ஆக இருந்தது. இதற்கிடையில், இன்று அதில் 105 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,810-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.115 அதிகரித்து ரூ.8,520-க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய (03/02/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,705-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.61,640-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.77,050-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,405-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.67,240-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 84,050-க்கும் விற்பனையானது.
இன்றைய (04/02/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.105 அதிகரித்து ரூ.7,705-க்கும் அதேபோல், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.840 அதிகரித்து ரூ. 62,840-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.77,050-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.115 அதிகரித்து ரூ. 8,520-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.920 அதிகரித்து ரூ.68,160-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.85,200 -க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,455-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 51,640-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.64,550-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை இன்று வெள்ளியை ரூ.1 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.107 ஆக இருந்த வெள்ளி விலை ரூ.106 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், 1கிலோ ரூ.1000 குறைந்து ரூ.1,06,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது


Click it and Unblock the Notifications