சென்னை: சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்றைய தினம் மீண்டும் ஏற்றம் கண்டிருக்கிறது . தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் விலை உயர்ந்து சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இன்று தங்கம் விலை: நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 10,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்றைய தினம் கிராமுக்கு 40 ரூபாய் விலை உயர்வு கண்டு 10,550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் நேற்று 84,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 320 ரூபாய் விலை உயர்வு கண்டு 84, 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

5 நாட்களில் விலை: சென்னையில் ஆபரண தங்கத்தை பொருத்தவரை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான இந்த ஐந்து நாட்களில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். திங்கட்கிழமை ஆன 22ஆம் தேதி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 140 ரூபாய் விலை உயர்ந்து 10,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . அடுத்ததாக செப்டம்பர் 23ஆம் தேதி அன்று செவ்வாய் கிழமை ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை உயர்ந்து 10,640 என உச்சம் தொட்டது.
2 நாள் குறைந்தது: புதன்கிழமை அன்று 40 ரூபாய் விலை சரிந்து 10,600 ரூபாய்க்கும் வியாழக்கிழமை அன்று 90 ரூபாய் விலை சரிந்து 10,510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே வெள்ளிக்கிழமையான இன்று ஒரு கிராம் 40 ரூபாய் விலை உயர்ந்த 10,550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரையிலான இந்த ஐந்து நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து இருக்கிறது சவரனுக்கு 960 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது .
24 கேரட் தங்கம்: 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்றைய தினம் கிராமுக்கு 43 ரூபாய் விலை உயர்ந்து 11,509 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு 344 ரூபாய் விலை உயர்வு கண்டு 92,072 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல 18 கேரட் தங்கமும் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் 8,740 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை கிராமுக்கு 320 ரூபாய் விலை உயர்ந்து 69 ,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரலாற்று உச்சத்தில் வெள்ளி: வெள்ளியின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. ஒரே நாளில் கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 153 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியை பொருத்தவரை ஒரே நாளில் கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 1,53,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்திருப்பது சாதாரண மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திங்கட்கிழமை தொடங்கி இன்று வரையிலான இந்த ஐந்து நாட்களில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 8 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 8000 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம் விலை தடாலடியாக ரூ.6000 உயர்வு.. MCX சந்தையில் நடப்பது என்ன..?

பதறும் மத்திய கிழக்கு நாடுகள்.. எகிறும் தங்கம், வெள்ளி விலை! இனி என்னவாகும்?

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தங்கம், வெள்ளி.. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலின் எதிரொலி..!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications