சென்னை: தங்கம் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு தொடர்ந்து கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை இரண்டு நாட்கள் குறைந்து , நான்கு நாட்கள் உயர்ந்திருக்கிறது. ஜூலை மாத தொடக்கத்திலிருந்து தற்போது வரை பார்க்கும்போது இந்த மாதத்திலேயே இன்று தான் தங்கத்தின் விலை விலை உச்சத்தில் இருக்கிறது.
ஆபரணத் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது 9,170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 480 ரூபாய் என தங்கத்தின் விலை உயர்ந்து 73,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தை பொறுத்தவரை கடந்த ஜூலை 1ஆம் தேதி 9,020 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஏற்ற இறக்கங்களில் இருந்தாலும் இந்த மாதத்திலேயே அதிகபட்ச விலையாக இன்று தங்கத்தின் விலை ஒரு கிராம் 9,170 ரூபாய் என உயர்வைக் கண்டிருக்கிறது. இந்த மாதத்திலேயே தங்கத்தின் அதிகபட்ச விலை இதுவாகும்.

ஜூலை மாதத்திலேயே உச்சம்: ஜூலை 1ஆம் தேதியிலிருந்து இன்று வரை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 150 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது, ஒரு சவரன் என பார்க்கும்போது 1200 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. இந்த 6 நாட்களிலேயே திங்கள்கிழமை தங்கம் ஒரு கிராம் 9,155 ரூபாய்க்கு விற்கப்பட்டது, இது செவ்வாய் அன்று 9,145 ரூபாய், புதன்கிழமை 9,100 ரூபாய் என விலை குறைந்தது. ஆனால் வியாழன்று 9,105 ரூபாய் என விலை உயர்ந்தது. வெள்ளிக்கிழமை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 9,110 ரூபாய் என இருந்து இன்று 9,170 ரூபாய் என ஆகி இருக்கிறது.
ரூ.10,000 ஐ கடந்தது ஒரு கிராம்: அடுத்ததாக 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 66 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10,000 ரூபாயை கடந்து 10,004 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . ஒரு சவரன் 528 ரூபாய் விலை உயர்ந்து 80,032 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கமும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் விலை உயர்வு கண்டு 7,555 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 400 ரூபாய் விலை உயர்வு கண்டு 60,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை: வெள்ளி கிராமுக்கு 2.10 ரூபாய் விலை உயர்ந்து 126 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2100 ரூபாய் விலை உயர்வு கண்டு1,26,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களிலேயே வெள்ளியின் விலை கிராமுக்கு 6 ரூபாயும், கிலோவுக்கு 6,000 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!



Click it and Unblock the Notifications