சென்னை: சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவது இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. சென்னையை பொருத்தவரை 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 17 ரூபாய் விலை உயர்ந்து 9,988 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 136 ரூபாய் விலை உயர்ந்து 79 ,904 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 100 கிராம் தங்கம் 1,700 ரூபாய் உயர்ந்து 9,98,800
ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத்தங்கம் விலை : அடுத்ததாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 9,140 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 15 ரூபாய் விலை உயர்ந்து 9,155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் என வரும்போது நேற்று 73,120 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 120 ரூபாய் விலை உயர்ந்து 73 ,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை: 18 கேரட் தங்கத்தின் விலையும் உயர்ந்து கண்டுள்ளது. ஒரு கிராம் 10 ரூபாய் விலை உயர்ந்து 7,540 ரூபாயாகவும் ஒரு சவரன் 80 ரூபாய் விலை உயர்ந்த 60 , 320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச காரணிகளே இந்தியாவில் தங்கம் விலை உயர்வுக்கு காரணம். வெள்ளியை பொருத்தவரை விலை மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் 125 ரூபாய்க்கும், 1 கிலோ 1,25,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
ஏன் விலை உயர்வு? : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரும் ஆகஸ்ட் 1 முதல் 30 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அவருடைய இந்த வரி விதிப்பு அறிவிப்பு சர்வதேச அளவில் தங்கத்தின் விலையை உயர்த்த செய்திருக்கிறது. பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி பலரும் முதலீட்டை திருப்பி உள்ளனர்.
உலக சந்தை நிலவரம்: சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 3,361 டாலர்கள் என விலை உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தையிலும் கோல்டு பியூச்சர்ஸ் காண்டிராக்ட் 0.4% உயர்வு கண்டது. இந்தியாவில் எம்சிஎஸ் வர்த்தகத்திலும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது . காலை 9.10 மணியளவில் ஆகஸ்ட் 5 கோல்ட் ஃபியூச்சர்ஸ் கான்ட்ராக்ட் -இல் 10 கிராம் 98,148 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது முந்தைய நாளை விட 0.31 சதவீதம் அதிகமாகும் .
More From GoodReturns

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications