சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாயும் சவரனுக்கு 160 ரூபாயும் உயர்வு கண்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கிறது.
தங்கம் விலை: அமெரிக்கா பல்வேறு நாடுகள் மீது விதிக்கும் இறக்குமதி வரி, ஈரான் இஸ்ரேல் போர், உக்ரைன் ரஷ்யா மோதல்கள் என தங்கம் விலை உயர்வுக்கு சாதகமாகவே உலக நிகழ்வுகள் அரங்கேறி வந்தன. இதனால் தங்கத்தின் விலையை ஜெட் வேகத்திற்கு உயர்ந்தது. பின்னர் தங்கம் விலை குறைந்தாலும், குறைந்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.

24 கேரட் தங்கம் விலை எவ்வளவு?: 24 கேரட் தங்கம் நேற்றைய தினம் ஒரு கிராம் 9,818 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . அது இன்றைய தினம் 9,840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .அதே வேளையில் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் நேற்று 78,544 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்றைய தினம் 78 ,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஒரு சவரனுக்கு 176 ரூபாய் என தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
ஆபரணத்தங்கம் விலை எவ்வளவு?: 22 கேரட் தங்கம் தான் நாம் ஆபரணமாக வாங்கக்கூடிய தங்கம். அந்த வகையில் 22 கேரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய தினம் ஒரு கிராம் 9,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 20 ரூபாய் விலை உயர்வு கண்டு 1 கிராம் 9,020 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய தினம் 72,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 72,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆபரண தங்கத்தில் விலை ஒரு சவரன் 160 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
4 நாட்களில் விலை மாற்றம்: வெள்ளியின் விலையை பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இல்லை ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1, 20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை பொருத்தவரை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது. திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 72,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது செவ்வாய்க்கிழமை அன்று 400 ரூபாய் விலை உயர்ந்து 72,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. புதன்கிழமை அன்று ஒரு சவரன் விலை குறைந்து 72,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மீண்டும் விலை உயர்வு கண்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்த நிலையில் இன்று 160 ரூபாய் விலை உயர்வு கண்டிருப்பது சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன? இனி வரும் நாட்களில் விலை போக்கு எப்படி இருக்கும்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இப்போது முதலீடு செய்யலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி..!! அட்சய திருதியை எனும் அமோக வாய்ப்பு!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

Wiproஇல் பங்கு வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்!! 19% லாபத்தில் உங்க பங்குகளை விற்க செம வாய்ப்பு!!

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications