சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாயும் சவரனுக்கு ஒரே நாளில் 520 ரூபாயும் உயர்வு கண்டிருக்கிறது. கடந்த திங்கள்கிழமை முதல் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 130 ரூபாயும் சவரனுக்கு 1,040 ரூபாயும் உயர்வு கண்டுள்ளது.
3ஆவது நாளாக தங்கம் விலை உயர்வு: அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கைகளும் அறிவிப்புகளும் சர்வதேச அளவிலும் உள்ளூர் அளவிலும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது சாதாரண மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.

24 கேரட் தங்கம் விலை எவ்வளவு: 24 கேரட் தங்கம் நேற்றைய தினம் ஒரு கிராம் 9,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . அது இன்றைய தினம் 9,971 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . அதே வேளையில் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் நேற்று 79,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இன்றைய தினம் 79, 768 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஒரு சவரனுக்கு 568 ரூபாய் என தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
22 கேரட் தங்கம் விலை எவ்வளவு:நாம் நகையாக வாங்கக் கூடிய 22 கேரட் தங்கம் விலையும் உயர்வு கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய தினம் ஒரு கிராம் 9,075 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 65 ரூபாய் விலை உயர்வு கண்டு 1 கிராம் 9,140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய தினம் 72,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 73,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆபரண தங்கத்தில் விலை ஒரு சவரன் 520 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
6 நாட்களில் ரூ.1,040 உயர்வு: தங்கத்தின் விலை பொருத்தவரை கடந்த 6 நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது. திங்கட்கிழமை அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 72,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது இன்று ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் விலை உயர்ந்து 73,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் 2 நாட்கள் குறைந்த தங்கம் விலை 4 நாட்கள் உயர்வில் தான் இருக்கிறது.

வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.4,900 உயர்வு: வெள்ளி விலையும் தடாலடியாக உயர்வு கண்டுள்ளது. சென்னையில் வெள்ளி ஒரு கிராம் 4.90 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் வெள்ளி அதிகபட்ச விலை உயர்வை கண்டுள்ளது. இதன் படி சென்னையில் வெள்ளி ஒரு கிராம் 125 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,25,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ஒரே நாளில் 4,900 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் வெள்ளி விலை ஒரு கிலோ 5,000 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications