தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் வாங்குவதற்கு மக்கள் ஆர்வமாகவே உள்ளனர் என தரவுகள் கூறினாலும், ஸ்மால் டிக்கெட் சேல்ஸ் அதாவது சமானிய மக்கள் வாங்கும் 1 -10 கிராம் அளவிலான விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது தான் களத்தின் உண்மை நிலவரம்.
தங்கம் விலை சவரனுக்கு 72000 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்துள்ள நிலையில் பெரும் பணக்காரர்கள் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் மட்டுமே தற்போது தங்கத்தை வாங்கி வருகின்றனர். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர், குறைந்து வரும் டாலர் மதிப்பு, வர்த்தக பாதிப்பு, பொருளாதார சரிவுகளில் இருந்து மீண்டு வரும் நோக்கில் தங்கத்தை மலை மலையாய் குவித்து வருகின்றனர்.

இதனாலேயே தங்கம் விலை விண்ணை முட்டிய நிலையிலும், சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் இருந்து வருகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமை சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 120 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இன்று ஆசிய சந்தையிலும் தடாலடியாக உயர்ந்துள்ளதால் தமிழ்நாடு ரீடைல் சந்தையிலும் இன்று தங்கம் விலை கிராமுக்கு 70 முதல் 100 ரூபாய் வரையில் உயரும் வாய்ப்பை கொண்டுள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 3327 டாலரில் இருந்து 3442 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இன்று காலை ஆசிய சந்தை வர்த்தகத்தில் 3418 டாலரில் இருந்து தற்போது 3474 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதனால் இந்திய ரீடைல் சந்தையில் இது பெரிய அளவிலான தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்திய ரீடைல் சந்தையின் இன்றைய தங்கம் விலை 9.30 மணிக்கு வெளியாகும்.
தங்கம் விலை கடந்த 24 மணிநேரத்தில் தடாலடியாக உயர முக்கியமான காரணம் அமெரிக்கா தான், ரெசிப்ரோக்கல் வரி, விசா கட்டுப்பாடுகள், வர்த்தக ஒப்பந்தங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். புதிதாக ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.
டிரம்ப் ஆட்சிக்கு வந்த நேரத்திலேயே பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மறைமுகமாகக் கூறி வந்த நிலையில், தற்போது டிரம்ப் வெளிப்படையாகவே இதுகுறித்து பேசி வருகிறார். இது தவிர டிரம்ப், ஜெரோம் பவல் மீது தொடர்ச்சியாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அதிபரின் பேச்சு மற்றும் ஜெரோம் பவல்-ஐ எப்போது வேண்டுமானாலும் இப்பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற டிரம்ப்-ன் மிரட்டல்கள், மத்திய வங்கியின் சுதந்திரம் குறித்த அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்தது. இதனால் நேற்று அமெரிக்கப் பங்குச்சந்தையிலும் 3 சதவீதம் வரையில் டாவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் குறியீடுகள் சரிவைச் சந்தித்தது.
இதன் எதிரொலியாகவே தங்கம் விலையும் உயரத் துவங்கியது, இன்றைய வர்த்தகத்தில் நேற்றை அமெரிக்கப் பங்குச்சந்தையின் வீழ்ச்சியின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
More From GoodReturns

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!



Click it and Unblock the Notifications