வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜூன் 2, 2025), தமிழகத்தில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.71,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களுக்கு சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது. அதேபோல், 24 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ரூ.77,848-க்கு விற்பனையாகிறது.
மே மாத இறுதி நிலவரம் மற்றும் இன்றைய மாற்றம்: கடந்த மே 31 ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.8,920-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.

இந்நிலையில், வாரத் துவக்க நாளான இன்று (ஜூன் 2), தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 22 காரட் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,950-க்கு விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.33 அதிகரித்து ரூ.9,764 விற்பனையாகிறது. சவரன் ரூ.264 உயர்ந்து ரூ.78,112 ஆகவும் விற்பனை செய்யப்ப்டுகிறது. இந்த விலை உயர்வு, இந்தியப் பங்குச் சந்தைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிலவரங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
18 காரட் தங்கத்தை பொறுத்தவரையில், 22 காரட் தங்கத்தின் விலை உயர்வு போலவே, 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. 18 காரட் தங்கம் என்பது 75% தூய தங்கத்தையும், மீதமுள்ள 25% மற்ற உலோகக் கலவையையும் கொண்டது. இது ஆபரணங்கள் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்று ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து ரூ.7370-க்கும், ஒரு சவரன் ரூ.58,960-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்வு பெரும்பாலும் சர்வதேச சந்தை நிலவரங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பான முதலீட்டுத் தேடல் போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இது தங்கத்தின் விலையை உயர்த்தி வருகிறது.
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, நகை வாங்குவோருக்குச் சுமையாக இருந்தாலும், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயருமா அல்லது குறையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications