மே 3-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கச் சந்தைகள் மூடப்பட்டிருக்கும். இதனால் தங்கம் விலையில் அவ்வளவாக மாற்றம் இருக்காது. கடந்த 10 நாட்களில் பார்க்கும்போது தங்கம் தொடர்ந்து குறைந்ததை பார்க்க முடிந்தது.
ஏப்ரல் 29-ஆம் தேதியன்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 44 ரூபாய் அதிகரித்தது. மற்ற தினங்களில் எல்லாம் குறைந்து காணப்பட்டது. இன்றைய தினம் ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,755-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9,551-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 7,240-க்கும் விற்பனையாகிறது.

24 கேரட், 22 கேரட் மற்றும் 18 கேரட் ஆகியவற்றில் தங்கம் விற்பனையாகிறது. சமீபகாலமாக ஏற்பட்ட தங்க விலை உயர்வினால் சாமானியர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. ஏனெனில் தங்கம் விலை கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதியன்று வரலாற்று உச்சத்தை எட்டியது. மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்கி சேமிக்கும் குடும்பங்களுக்கு இது பெரும் சுமையாக அமைந்தது. இருப்பினும் மறுநாளே 300 ரூபாய் குறைந்தது.
இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8755-க்கும், 1 சவரன் 22 கேரட், ரூ.70,040-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.87,550-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,551-க்கும். 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 76,408-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 95,510-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 7240-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.57,920-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 72,400-க்கும் விற்பனையாகிறது.
மேலே கூறப்பட்டுள்ள விலை வெறும் தங்கத்திற்கானது மட்டுமே. இந்த விலையோடு மேக்கிங் சார்ஜஸ், ஜிஎஸ்டி போன்றவற்றை சேர்த்து தான் நகைக்கடைக்காரர்கள் விற்பனை செய்வார்கள். 24 கேரட் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. ஏனெனில் இதில் 99.9 சதவீதம் தூய தங்கம் இருக்கும். இதை வளைத்து முறுக்கி நகைகள் செய்யும் போது அவை ஒடிந்து விடும். ஆனால் 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருக்கும் இதோடு காப்பர் மற்றும் வெள்ளி கலந்து நகைகள் செய்யப்படும்.
நாளைய தினமும் பெரிதாக தங்க விலையில் மாற்றம் இருக்காது. இனிவரும் நாட்களில் இதே நிலை தொடருமா? அல்லது விலை குறையுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications