இந்திய மக்கள் எவ்வளவு விலை உயர்ந்தாலும் தொடர்ந்து வாங்கும் பொருள் தங்கம் தான், விலை உயர்வால் வாங்கும் அளவு குறைந்தாலும் திட்டிக்கொண்டே வாங்குவதும், வாங்கிய பின்பு மகிழ்ச்சி அடைவதும் சாமானிய மக்களின் பழக்கமாகவே உள்ளது.
பெரும் முதலீட்டாளர்களும், பணக்காரர்களும் பங்குச்சந்தை, அரசு பத்திரம், பிட்காயின் எனப் பலவற்றில் முதலீடு செய்தாலும் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். சமீபத்தில் Zerodha நித்தின் காமத் கூறுகையில் ஒரு குடும்பத்தின் மொத்த முதலீட்டில் 10-15 சதவீதம் தங்கத்தில் முதலீடு செய்தால் பணவீக்கம் குறித்த கவலை இருக்காது எனத் தெரிவித்தார்.

இது ஒவ்வொருவரின் முதலீட்டு விருப்பத்திற்கும், ரிஸ்க் அளவீட்டுக்கும் மாறுபடும். சரி நாம விஷயத்திற்கு வருவோம், இந்தப் பட்ஜெட்டில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைத் தயாரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருக்கும் வேளையில் தங்கம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தங்கம் பார்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற நகைத் துறையினரின் நீண்டகாலக் கோரிக்கைக்கு இந்திய வர்த்தக அமைச்சகம் ஆதரவு அளித்துள்ளது என அரசு அதிகாரிகளும், தொழில்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நலிவடைந்து வரும் நகை ஏற்றுமதிக்கு அதிகப்படியான வரி நடைமுறையில் இருப்பது பெரும் சுமையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட்டில், தங்க பார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கவும், கட்டணங்களைக் குறைப்பதற்கும் வர்த்தக அமைச்சகம் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் தங்க பார் மீதான வரிக் குறைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்காலப் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரத்தின கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (GJEPC) அனைத்து வகையான தங்கம் மீதான இறக்குமதி வரியை 15% லிருந்து 5% ஆகக் குறைக்கவும், மற்றும் இந்தியாவின் நகைக்கடைகளுக்கான செலவுகளைக் குறைக்கக் கட் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மீதான சுங்க வரியை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
GJEPC இன் தலைவர் விபுல் ஷா கூறுகையில், தங்கத்தின் மீதான சுங்க வரி உலக அளவில் மிக அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது எனத் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சகம் கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட ஃபைண்டிங்க்ஸ் (findings), தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களால் செய்யப்பட்ட நாணயங்கள், மற்றும் தங்கத்தைச் சுத்திகரிக்கப் பயன்படும் spent catalysts ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட ஃபைண்டிங்க்ஸ் (findings) மற்றும் நாணயங்கள் மீதான புதிய இறக்குமதி வரி விகிதம் 15% ஆகும். மேலும் தங்கத்தைச் சுத்திகரிக்கப் பயன்படும் spent catalysts இறக்குமதி வரி விகிதம் 14.35% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்தப் புதிய வரி மாற்றம் ஜனவரி 22,2024 முதல் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications