டிசம்பர் 7-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,115 என்ற விலையில் விற்பனயாகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,762 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நவம்பர் 24-ஆம் தேதி அன்று ரூ. 7,300 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட 22 கேரட் தங்கம் தற்போது படிப்படியாக குறைந்து 7,115-ஐ எட்டியுள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோவை மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,115 என்ற விலையில் விற்பனையாகிறது. 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.56,920 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.71,150-க்கு விற்பனையாகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,762-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.62,096-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் 77,620-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.5,875-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,000-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.58,750-க்கும் விற்பனையாகிறது.
22 கேரட் தங்கத்தில் தான் நகைகள் செய்யப்படுகிறது. இதில் 91.6% தூய தங்கம் இருக்கும். 24 கேரட் தங்கம் தூய தங்கம். இதில் 100 சதவீதம் தூய தங்கம் இருக்கும். இதை வைத்து கோல்ட் பார்கள் மற்றும் கோல்ட் நாணயங்களை செய்யலாம். 24 கேரட் தங்கம் மிகவும் மென்மையானது என்பதால் இதை முறுக்கி நகைகள் செய்ய முடியாது. எனவே இதனோடு தங்கம், வெள்ளி, காப்பர் மற்றும் சில்வர் போன்றவற்றை கலந்து நகைகள் செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற பகுதிகளில் இன்று 1 கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்ச ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலே கூறப்பட்டுள்ள விலை தங்கம் மற்றும் வெள்ளிக்கான விலை மட்டுமே. இதனோடு பிற சார்ஜ்களையும் சேர்த்து தான் நகைகளாக விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக ஒரு நகை வாங்கும் போது 40 சதவீதம் வரை மேக்கிங் சார்ஜஸ், நீங்கள் பெரும் டிசைனை பொறுத்து இருக்கலாம்.


Click it and Unblock the Notifications