டிசம்பர் 8-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை சந்தைகள் மூடப்பட்டிருக்கும். இதனால் தங்கம் விலை அதற்கு முந்தைய தினம் விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றமின்றி இருக்கும். இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,115 ஆகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,762 ஆகவும் உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,115-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 56,920-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 71,150-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,762-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் 62,096-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.77,620-க்கும் விற்கப்படுகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.5875-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் 47,000-த்திற்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் 58,750-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ. 1 லட்ச ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளி விலையை தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் ஒன்று மத்திய மாநில அரசு வரி. ஒவ்வொரு மாநிலத்தின் வரியை பொருத்தும் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். இதனால் தான் வெவ்வேறு நகரங்களிலும் வெவ்வேறு விலையில் தங்கம் விற்பனையாகிறது. ஒரு மாநிலத்தின் வரி குறைவாக இருக்கும் பட்சத்தில் அங்கு வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் விலையும் குறைவாக இருக்கும். அதுவே ஒரு மாநிலத்தில் இறக்குமதி வரி அதிகமாக இருந்தால் அப்போது அதை சமன்படுத்தும் பொருட்டு வாடிக்கையாளர்களிடம் அதிக விலையில் தங்கம் விற்பனை செய்யப்படும்.
மேலே கூறப்பட்டுள்ள விலை தங்கத்திற்கானது மட்டுமே. இவற்றோடு மேக்கிங் சார்ஜஸ், உள்ளூர் கடைக்காரர்களின் விலை, ஜிஎஸ்டி போன்ற அனைத்தும் சேர்த்து நகைகளாக விற்பனை செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications