நவம்பர் 28-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,090-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,735-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவம்பர் மாதம் துவங்கியதிலிருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமாகத்தான் இருந்து வருகிறது. அதுவும் நவம்பர் மாதம் திருமணம் சீசன் என்பதால் நகை வாங்க இருப்பவர்கள் தங்க விலை ஏற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
நேற்றைய (27/11/2024) தினம் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,105-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.56,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7751-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.62,008-க்கும் விற்பனையானது.

இன்றைய (28/11/2024) தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர், மதுரை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.7,090-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.120 குறைந்த ரூ.56,720-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.150 குறைந்த ரூ.70,900-க்கும் விற்பனை ஆகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.16 குறைந்து ரூ.7,735-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.128 குறைந்து ரூ.61,880-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.160 குறைந்து ரூ77,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் 18 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து ரூ.5,860-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் 100 குறைந்த ரூ.58,600-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை நிலவரம்: இன்றைய தினம் வெள்ளி விளையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய வேலையில் தான் இன்றும் உள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ. 98-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை மற்றும் மதுரையில் ரூ.98,000-த்திற்கு விற்பனை ஆகிறது.
மேலே கூறப்பட்டுள்ள விலை தங்கம் மற்றும் வெள்ளிக்கான விலை மட்டுமே. நகைகளாக வாங்க திட்டமிடுபவர்களுக்கு மேக்கிங் சார்ஜஸ், ஜிஎஸ்டி, உள்ளூர் விற்பனையாளரின் கட்டணங்கள் போன்ற பிற கட்டணங்களையும் சேர்த்துதான் இறுதி விலை தீர்மானிக்கப்படும். மேக்கிங் சார்ஜஸ் பொதுவாக 40 சதவீதம் வரை நீங்கள் வாங்கும் டிசைனை பொருத்து மாறுபடலாம்.


Click it and Unblock the Notifications