நவம்பர் 3-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் தங்கம் விலை 15 ரூபாய் குறைந்திருந்த நிலையில், இன்றும் அதே விலையில் தான் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று சந்தைகள் மூடப்பட்டிருக்கும். ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,370 ரூபாயாகவும், அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்க விலை 8,040 ரூபாயாகவும் உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,370 ரூபாயாகவும், 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 58,960 ரூபாயாகவும் உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 8,040 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 64,320 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாகத்தான் இருந்து வருகிறது. அதுவும் சமீப காலமாக எந்தவித விலை குறைவும் இல்லை. இதனால் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு ஒரு கிராமுக்கு 1000 ரூபாய் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதாரம் மந்த நிலை போன்றவற்றின் காரணமாகவும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் தந்தேராஸ் பண்டிகையின் காரணமாகவும் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது. ஆனாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் நகை கடைகளில் குவிந்தனர்.
ஆனால் இந்த விலை ஏற்றமும் தங்கத்தை ஒரு முதலீடாகப் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே வாங்கிய தங்கத்திற்கான மதிப்பு தொடர்ந்து உயர்கிறது. ஆனால் புதிதாக நகை வாங்க இருப்பவர்களுக்கு இந்த விலை ஏற்றம் சற்று அதிர்ச்சி அளிக்கலாம்.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 106 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,06,000 ரூபாயாக உள்ளது.
தீபாவளி பண்டிகை தற்போது முடிந்துள்ளது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் தங்கம் விலை வாங்குவதற்கு ஏற்றார் போல் மாறுமா? என்ற நம்பிக்கையுடன் பலரும் காத்திருக்கின்றனர்.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications