தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் சீராக இருந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஏறிக்கொண்டே சென்ற தங்கம் விலை செப்டம்பர் மாதம் பிறந்ததிலிருந்து சீராக உள்ளது. ஜூலை மாதம் பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு சரசரவென 400 ரூபாய் வரை குறைந்த தங்கம் விலை அதன் பிறகு ஆகஸ்ட் 7-ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஏறத் தொடங்கியது. இதனால் 450 ரூபாய் வரை ஏறிய தங்கம் விலை செப்டம்பர் மாதம் பிறந்ததிலிருந்து எந்தவித ஏற்றமும் இல்லாமல் உள்ளது. இந்தப் பதிவில் கோவை மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,669 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,276 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: செப்டம்பர் 4-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,669 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 53,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,276 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 58,208 ரூபாயாக உள்ளது.
இன்று 1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 5,463 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 சவரன் 18 கேரட் தங்கத்தின் விலை 43,704 ரூபாயாக உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 90,000 ஆகவும் உள்ளது. நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேச வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தே.. இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்து வெள்ளியின் விலை உயரலாம் அல்லது குறையலாம்.
நம் நாட்டில் வெவ்வேறு நகரங்கள் இருந்தாலும்.. அவற்றில் தங்கத்திற்கான கலாச்சாரம் என்பது ஒன்றாகத் தான் உள்ளது. திருமணம், பண்டிகைகள் பிற சடங்குகள் என அனைத்திற்கும் தங்க நகைகளின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுவும் கோயம்பத்தூர், மதுரை போன்ற பரபரப்பான நகரங்களில் தங்கத்திற்கான தேவை இன்னும் அதிகமாக உள்ளது. இது போன்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. நகைகள் வாங்க திட்டமிடுபவர்கள் இன்றைய தினத்தை பயன்படுத்தி வாங்கி கொள்வது உத்தமம்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications