சென்னை: இந்திய மக்களின் முக்கிய முதலீடுகளில் ஒன்று தங்கத்தில் முதலீடு செய்வது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள், வங்கிகளில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்கள் என எண்ணற்ற திட்டங்கள் இருந்தாலும், சிறிது பணம் சேர்ந்தால் 1 கிராம் நகையாவது வாங்கி வைக்க வேண்டும் என்பது தான் பல இந்தியக் குடும்பங்களின் முதன்மை நோக்கம். என்னதான் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் அவற்றை விரும்பி வாங்கும் பெண்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைவதே இல்லை. இந்தப் பதிவில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நிலவரப்படி கோவை மதுரையில் தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி நிலவரப்படி, தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் நேற்றைய விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,031 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,445 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று 1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 5,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 51,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 56,648 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
பட்ஜெட்டில் வெளியான சுங்கவரி குறைப்பு தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு தங்கம் விலை கணிசமாக குறையத் தொடங்கியது. இதனால் ஜூலை 23-ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை கிராமுக்கு தோராயமாக 350 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஆனால் கடந்த இரு தினங்களாக தங்கம் விலையில் சற்று ஏற்றம் காணப்பட்டது. அதன்படி நேற்றைய முன் தினம் தங்கம் விலை கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்தது. நேற்றைய தினம் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்திருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய விலையில் தான் இன்றும் விற்கப்படுகிறது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,031 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,445 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஜூலை 23-ஆம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தங்க விலையில் குறைவு ஏற்பட்டு வந்தாலும், நேற்று 20 ரூபாய் அதிகரித்தது. நேற்றைய முன்தினம் 70 ரூபாய் அதிகரித்திருந்தது.
இந்த மாதத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று தங்கம் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. இது கடந்த மாதங்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று மட்டும் 6,330 ரூபாய்க்கு 1 கிராம் 22 கேரட் தங்கம் விற்கப்பட்டது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் 6,906 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொதுவாக ஆடி மாதங்களில் திருமணங்கள் எதுவும் நடக்காது. ஆனால் இனி வரும் மாதங்கள் திருமணம் சீசன் என்பதால், தங்கம் விலையில் இதே போன்ற ஏற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்னும் இரண்டே மாதங்களில் தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இதன் காரணமாகவும் டிமாண்ட் அதிகரித்து விலை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் விலை குறைவான நாட்களை பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?



Click it and Unblock the Notifications