செப்டம்பர் 3-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதலே தங்கம் விலை படிப்படியாக ஏறி நகைப்பிரியர்களுக்கு ஷாக் தந்தது. இதனால் விலை குறைவான நாட்களை எண்ணி மக்கள் காத்திருந்தனர். அதற்கு ஏதுவாக தற்போது 2-வது நாளாக தங்கம் விலை சீராக உள்ளது. நேற்று தங்கம் விலை செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று விற்பனையான விலையை விட 25 ரூபாய் குறைந்தது. அதே விலையில் இன்றும் தொடர்கிறது.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,670 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,277 ஆகவும் உள்ளது. இந்தப் பதிவில் கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: செப்டம்பர் 3-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,670 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 53,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,277 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 58,216 ரூபாயாக உள்ளது.
இன்று 1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 5,464 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 சவரன் 18 கேரட் தங்கத்தின் விலை 43,712 ரூபாயாக உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.90.91 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 90,900 ஆகவும் உள்ளது. சர்வதேச வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தே.. இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்து வெள்ளியின் விலை உயரலாம் அல்லது குறையலாம்.
காலம் காலமாக நம் நாட்டில் இருக்கும் முக்கிய முதலீடு தங்க நகைகள் தான். இதை வெறும் ஆபரணமாக மட்டும் பயன்படுத்தாமல் அவசரகாலங்களில் உதவும் விஷயமாகவும் மக்கள் கருதுகின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் தேவைப்படும் நேரங்களில் தங்கத்தை வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.
உறவினர்களே 1 ரூபாய் தருவதற்கு யோசிக்கும் இந்தக் காலத்தில் கையில் 1 கிராம் தங்க நகை இருந்தால் அதை மருத்துவச் செலவுகளுக்கு தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தி பணமாக பெற்றுக் கொள்ளலாம். நம் நாட்டில் இன்னும் பல முதலீட்டு திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை முதிர்வு காலத்துடன் வருகின்றன. முதிர்வு காலம் முடிவதற்குள் முதலீட்டை திரும்ப பெறும்போது அபராதம் விதிக்கப்படும்.
எனவே அவசர காலங்களுக்கு இதுபோன்ற முதலீட்டு திட்டங்களை நம்பி இருக்க முடியாது. அந்த நேரங்களில் கண்டிப்பாக தங்க நகைகள் பயனளிக்கும். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏதுவான நேரத்தை தேடும் மக்களுக்கு இன்றைய தினம் ஏதுவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications