இந்தியாவின் முக்கிய பண்டிகை காலம் இது, சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய பிராண்டுகள் வரையில் இந்த பண்டிகை காலத்தில் தான் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறுவார்கள். இதற்காகவே பல நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து விற்பனையும் அதிகரிக்கும்.
இதேபோல் இந்த வருடத்தில் பண்டிகை கால விற்பனை சூடிப்பிடிக்கத் துவங்கியிருக்கும் வேளையில், நகைக் கடைகள் மட்டும் புலம்ப துவங்கியுள்ளது. ஆம், எல்லாவற்றுக்கும் காரணம் இந்த தங்கம் விலை உயர்வு தான்.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தங்க விலை 10 கிராம் ரூ.1,10,540 என்ற புதிய உச்சத்தை எட்டியது, இன்று லாப நோக்கத்திற்காக முதலீட்டாளர்கள் விற்ற காரணத்தால் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை உயர்வு, நகை வியாபாரிகளின் வர்த்தகத்தைக் குறைக்கும் என அச்சம் நிலவுகிறது.
இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் (IBJA) தகவலின்படி, தங்கம் விலை மற்றும் அதன் மீது விதிக்கப்படும் 3% ஜிஎஸ்டி உடன் சேர்த்தால் ஒரு நபர் 10 கிராமுக்கு ரூ.1,13,856 செலுத்த வேண்டியுள்ளது. இதைத் தாண்டி செய்கூலி, சேதாரம் போன்றவையும் உள்ளது. தங்கம் விலை உயர்வால் வர்த்தகம் குறையும் என்ற அச்சம் நகைக் கடைகள் மத்தியில் உள்ளது.
தற்போது 10 கிராம் தங்கம் விலை ரூ.1,13,856 ஆக இருக்கும் வேளையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.80,000 (ஜிஎஸ்டி உடன் சேர்த்து) ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை வெறும் ஒரு வருட காலத்தில் 42% உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, உலகளாவிய சந்தையின் தாக்கத்தின் மூலம் ஏற்பட்டு இருந்தாலும் மக்களிடம் விலை உயர்வின் காரணமாக விருப்பம் குறைந்துள்ளது.
இதனால் இப்பண்டிகை காலத்தில், தங்க விலை உயர்வு நகை விற்பனையைப் பாதிக்கலாம் என்று நகை வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். மேலும் இந்த பண்டிகை காலத்தில் புதிய தங்க நகை விற்பனை மந்தமாக இருந்தாலும், பழைய தங்கத்தை புதிய டிசைனர் நகைகளுக்கு மாற்றுவது 45% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டு 20-25% அளவில் அதிகரித்த பழைய நகை டூ புதிய நகை வர்த்தகம் இந்த ஆண்டு 45 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் தங்கம் விலை உயர்வு காரணமாக, தங்கத்தின் அளவு விற்பனை 15% வரை குறையலாம், ஆனால் மதிப்பு அடிப்படையில் விற்பனை 25-30% உயரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு இன்று 3,665 டாலர் அளவில் குறைந்துள்ளது, நேற்றைய வர்த்தகத்தில் 3700 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று இரவு நேரத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை முடிவுகள் வெளியிட உள்ளது.
இக்கூட்டத்தில் பென்ச்மார்க் வட்டி விகிதம் 0.25 - 0.50 சதவீதம் வரையில் குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இப்படியிருக்கையில் தங்கம் விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய புல்லியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், தங்க விலை விரைவில் ஒரு அவுன்ஸுக்கு 4000 டாலர் மதிப்பைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். இதனால் தங்கம் விலை இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்குக் கீழே குறைய வாய்ப்பில்லை.
More From GoodReturns

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications