சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 அதிகரிப்பு.. 1 சவரன் ரூ 63,576-க்கு விற்பனை!

தங்கம் விலை நவம்பர் 8-ஆம் தேதி அன்று மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிராமுக்கு 85 ரூபாய் அதிகரித்திருக்கிறது. யாருமே எதிர்பார்த்திறாத வகையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,285 ரூபாயாகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,947 ரூபாயாகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோயம்பத்தூர் மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 85 ரூபாய் அதிகரித்து 7,285 என்ற உச்சம் விலையை எட்டியுள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் 58,280-க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் 22 கேரட் தங்கம் 72,850 ரூபாயாக உள்ளது.

 சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 அதிகரிப்பு.. 1 சவரன் ரூ 63,576-க்கு விற்பனை!


1 கிராம் 24 கேரட் தங்கம் 91 ரூபாய் அதிகரித்து 7,947 ரூபாயை எட்டியுள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 728 ரூபாய் அதிகரித்து 63,576 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராம் 24 கேரட் தங்கம் 910 ரூபாய் அதிகரித்து 79,470 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை 10 கிராமுக்கு தோரயமாக ரூ.1000 வரை உயர்ந்துள்ளது. தை மாதம் அதிகளாவில் திருமணங்கள் நடைபெறும். இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வது புதிதாக நகை வாங்க இருப்பவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள விலை தங்கத்திற்கானது மட்டுமே. தங்க நகைகளின் இறுதி விலையைக் கீழ்க்காணும் பார்முலாவை பயன்படுத்திதான் நகைக் கடைக்காரகள் தீர்மானிக்கின்றனர்.

தங்க நகை விலை = {தங்கத்தின் விலை X (கிராமில் எடை)} + மேக்கிங் கட்டணங்கள் + GST ​​இல் 3%+ ஹால்மார்க்கிங் கட்டணங்கள்

பொதுவாக 22 கேரட்டில் தான் தங்க நகைகள் செய்யப்படுகிறது. ஏனெனில் 24 கேரட் தங்கம் தூய்மையானது. இது மிகவும் மென்மையாக இருக்கும் காரணத்தினால் அதை வளைத்து, முறுக்கி தங்க நகைகளை செய்ய முடியாது.

நீங்கள் 20 கிராம் எடை கொண்ட 22 கேரட் தங்க நெக்லஸை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 22 கேரட் தங்கத்தின் 20 கிராம் விலை 1,45,700 ரூபாய். இதற்கு மேக்கிங் சார்ஜஸ் 15 சதவீதம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் கூடுதலாக 21,855 ரூபாய் செலவாகலாம். இந்த வளையலுக்கு 3 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால் 4371 ரூபாயாக இருக்கும். இந்த அனைத்து தொகையும் மொத்தமாக கணக்கிட்டு வியாபாரிகள் உங்களிடம் தங்க நகைகளை விற்பனை செய்கின்றனர். அப்படியானால் ரூ.1,71,926 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த விலையும் தோராயமானது மட்டுமே. மேலும் ஹால்மார்க்கிங் கட்டணங்களும் இதில் அடங்கும்.

கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 103 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,03,000 ரூபாயாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+