நவம்பர் 9-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்றைய தினம் 85 ரூபாய் அதிகரித்து இருந்தது. ஆனாலும் புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்னும் விலை குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் ரூ. 7,275-க்கும், 1 கிராம் 24 கேரட் 7,936 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கோவை மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 7,275 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் குறைந்து 58,200 ரூபாயாக உள்ளது. 10 கிராம் 22 கேரட் தங்கம் 100 ரூபாய் குறைந்து 72,750க்கு விற்பனையாகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11 குறைந்த 7,936 ரூபாயாக இருக்கிறது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 88 ரூபாய் குறைந்து 63,488 ரூபாயாக உள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கம் 110 ரூபாய் குறைந்து 79,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் சமீப காலமாக பிற சேமிப்புத் திட்டங்களைப் போலவே தங்கம் வாங்குவதும் முக்கிய முதலீடாக மாறியுள்ளது. தங்கத்திற்கு இருக்கும் கலாச்சார முக்கியத்துவம் மட்டும் அல்லாமல் தங்களிடம் சிறிது பணம் சேர்ந்தால் உடனே தங்க நகையை வாங்கி வைக்க வேண்டும் என்று சிந்திக்கும் குடும்பங்கள் தான் அதிக அளவில் உள்ளன. இதற்கு மிக முக்கிய காரணம் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்து கடன் பெறலாம் என்பதுதான்.
தங்கம் கடந்து வந்த பாதையை பார்க்கும் போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை தங்கம் வழங்கியுள்ளது. தற்போது 2024-ஆம் ஆண்டில் இருக்கிறோம். இன்றிலிருந்து சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றால் தங்கம் விலை எவ்வளவு லாபத்தை கொடுத்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம். 2000-ஆம் ஆண்டில் தங்கம் விலை கிராமுக்கு 440 ரூபாயாக மட்டுமே இருந்தது இதனால் ஒரு சவரனே 3,520 ரூபாய்க்குள் வாங்கிவிடலாம். ஆனால் இன்று யோசித்துப் பாருங்கள்.. இன்று 1 கிராம் வாங்குவதற்கே 7,000-த்திற்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது. 2000-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் ஆண்டு வரை தங்கம் சுமார் 1636.59 சதவீத லாபத்தை வழங்கி இருக்கிறது.
இதனால் தான் நம் நாட்டு மக்களிடையே தங்கத்திற்கு அவ்வளவு பெரிய மரியாதை. சமீப காலமாக ஏற்படும் விலை உயர்வு ஏற்கனவே தங்கம் வாங்கி வைத்த முதலீட்டாளர்களுக்கு தங்களுடைய லாபத்தை அதிகரிக்க உதவியுள்ளது. ஆனால் புதிதாக நகை வாங்குபவர்களுக்கு இந்த விலை ஏற்றம் சற்று சிக்கலாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் தங்கம் விலையில் ஏற்பட போகும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 103 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,03,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications