நவம்பர் 12-ஆம் தேதியான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 135 குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் பார்க்கும்போது இதுதான் மிகப்பெரிய விலை குறைவாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக தொடர்ந்து ஏறிக்கொண்டே சென்ற தங்கம் விலையில் இன்று மிகப்பெரிய இறக்கம் ஏற்பட்டுள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,085 ரூபாயாகவும், 1 கிராம் 24 கேரட் 7,729 ரூபாயாகவும் உள்ளது.
கோவை, மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.135 குறைந்திருக்கிறது. 22 கேரட் தங்கத்தில் தான் நகைகள் செய்யப்படுகின்றன. தங்க நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 1 கிராம் 22 கேரட் 135 குறைந்து 7,085 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய தினம் 7,220 ரூபாய்க்கு விற்பனையானது.

1 சவரன் ரூ.1080 குறைந்திருக்கிறது. இதனால் ஒரு சவரன் விலை 56,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராம் 22 கேரட் தங்கம் 1,330 ரூபாய் குறைந்து 70,850 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் 147 ரூபாய் குறைந்திருக்கிறது. 24 கேரட் தங்கத்தில் தங்க பார்கள் மற்றும் தங்க காயின்கள் செய்யப்படுகிறது. இதில் நகைகள் செய்ய முடியாது. ஆனால் தூய்மையான தங்கத்தை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 24 கேரட் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 7,729 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் 61,832 ரூபாய்க்கும் விற்பனையாகிறது, 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.77,290-க்கு விற்பனையாகிறது.
அக்டோபர் 31-ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை 1 கிராம் தோராயமாக 7500 ரூபாயை எட்டியது. மேலும் 24 கேரட் 8,133 ரூபாய்க்கு விற்பனையானது அன்றைய தினத்தோடு ஒப்பிடுகையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு 380 ரூபாய் வரை குறைந்துள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 100 ரூபாயை எட்டியுள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications