தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு.. சென்னை, கோவை, மதுரையில் 1 கிராம் ரூ.7,045-த்திற்கு விற்பனை!

நவம்பர் 13-ஆம் தேதியான இன்றைய தினம் தங்கம் விலை மீண்டும் 30 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்று கிராமுக்கு 147 ரூபாய் வரை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்து புதிதாக நகை வாங்க திட்டமிடுவார்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,045 ரூபாய்க்கும், அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,685 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முன்னணி நகரங்களில் இன்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்திருக்கிறது. 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,045-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.56,360-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் 70,450 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு.. சென்னை, கோவை, மதுரையில் 1 கிராம் ரூ.7,045-த்திற்கு விற்பனை!

ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 44 ரூபாய் குறைந்து 7,685 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 24 கேரட் தங்கம் 352 ரூபாய் குறைந்து 61,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராம் 24 கேரட் தங்கம் 440 குறைந்து 76,850 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை இன்றும் நேற்று சேர்ந்து சவரனுக்கு 1300 ரூபாய் குறைந்திருக்கிறது. புதிதாக நகை வாங்குபவர்கள் இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் பணவீக்கத்திற்கு எதிராக நகைகளை வாங்கி சேமிக்கும் குடும்பங்கள் இந்தியாவில் அதிகம். பண்டிகைகள், திருமண விசேஷங்கள், பரிசளிப்பது என பலவற்றுக்கும் தங்கம் பயன்படுகிறது.

பொதுவாக தங்க நகையின் விலை உயர்வு புதிதாக தங்க நகை வாங்குபவர்களுக்கு சிக்கலாக இருக்கலாம். ஆனால் ஏற்கனவே தங்க நகை வாங்கி அவற்றை முதலீடாக பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் விலை அதிகரிப்பது லாபத்தை தரும். அவர்கள் வாங்கிய பொருள்களின் மதிப்பு உயர்வது தான் அதற்கு காரணம். எனவே தங்க நகை அதிகரிப்பது மற்றும் குறைவது என இரண்டுமே வெவ்வேறு மக்களுக்கு பலனளிக்கும்.

கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 101 ரூபாயை எட்டியுள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,01,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+