அக்டோபர் 20-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. நேற்று சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 45 ரூபாய் கிராமுக்கு உயர்ந்தது. இதனால் 24 கேரட் தங்கம் விலை தோராயமாக 8,000 ரூபாயை எட்டியது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,280 ரூபாயாகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 7,942 ரூபாயாகவும் உள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,280 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 58,240 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை நேற்றைய தினம் 320 ரூபாய் அதிகரித்தது.

1 கிராம் 24 கேரட் தங்கம் இன்றைய தினம் 7,942 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 63,536 ரூபாயாக உள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் போது 22 கேரட் தங்கம் ரூ.6300 முதல் ரூ.6800 வரை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ரூ.7,000 என்ற விலையை எட்டியுள்ளது. அதுவும் 24 கேரட் தங்கத்தின் விலையை பற்றி சொல்லவே வேண்டாம். இன்னும் 40 ரூபாய் அதிகரித்தால் 8000 ரூபாயை எட்டி விடும். கடந்த சில நாட்களில் தங்கம் நிலையில் மிகப்பெரிய மாற்றம். தங்கம் கடந்து வந்த பாதையை பார்த்தால் பிற முதலீடுகளைப் போலவே அதிக அளவு லாபத்தை தந்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தங்க விலையோடு இன்றைய விலையை ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும். ஏன் 10 ஆண்டுகள் கூட வேண்டாம். கடந்த பட்ஜெட்டில் ஏற்பட்ட சுங்கக் கட்டண குறைப்புக்குப் பிறகு தங்கம் விலை வெகுவாக குறைந்தது. ஆனால் அதன் பிறகு அதிகரிக்கத் தொடங்கிய தங்கம் விலை இன்றுவரை கிராமுக்கு 800 முதல் 900 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
ஏன் இந்த விலை ஏற்றம்?: தங்கம் விலை பொதுவாக பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள், மத்திய மாநில அரசு வரி, பண்டிகைக் காலங்களில் ஏற்படும் டிமாண்ட் ஆகியவற்றின் காரணமாக ஏற்படலாம்.
கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 20-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 1,07,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications