அக்டோபர் 21-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய முன் தினம் 40 ரூபாய் அதிகரித்திருந்தது. சில நாட்களாக தங்கம் விலை ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,300 ரூபாயாகவும், 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,964 ரூபாயாகவும் உள்ளது.
கோவை மதுரை மற்றும் சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மதுரை மற்றும் சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 7,300 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் அதிகரித்து 58,400 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 22 ரூபாய் அதிகரித்து 7,964 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 176 ரூபாய் அதிகரித்து 63,712 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

22 கேரட் தங்கம் தங்க நகைகள் செய்ய பயன்படுகிறது. இதில் 91.6% தூய தங்கமும் மீதமுள்ள சதவீதத்திற்கு பிற உலோகங்களும் கலந்திருக்கும் அதாவது காப்பர் போன்ற உலோகங்கள் கலந்து தங்க நகைகளை செய்வார்கள். 22 கேரட் தங்கம் 6,500 முதல் 6,800 என்ற விலையில் விற்பனையான நிலையில் தற்போது 7,300 வரை அதிகரித்துள்ளது.
அதேபோல 24 கேரட் தங்கம் கோல்ட் பார், கோல்டு காயின்கள் போன்றவை செய்ய பயன்படுகிறது. இது தூய தங்கமாகும். இதை தங்க நகைகளாக செய்ய முடியாது. இதன் விலையும் கிராமுக்கு 8000 ரூபாயை நெருங்கி இருக்கிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பொதுவாகவே எந்தப் பண்டிகை காலங்கள் வந்தாலும் தங்கம் விலையில் மிகப் பெரிய மாற்றம் இருக்கும். அது மட்டும் இன்றி அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் காரணமாகவும் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தங்கம் விலை ஏற்றம் மத்திய மாநில அரசு வரி, புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையில் இன்றைய தினம் மாற்றமில்லை. அக்டோபர் 20-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 1,07,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications