அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, சீனா தவிர மற்ற நாடுகளின் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெசிப்ரோக்கல் வரி விதிப்புகளை 90 நாடுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது மூலம் முதலீட்டு சந்தை புத்துயிர் பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டது போல் டாலர் மதிப்பை அளவிடும் DXY குறியீடு 10 வருடத்தில் இல்லாத வகையில் 100-க்கு கீழ் குறைந்துள்ளது. டாலர் மதிப்பின் சரிவு சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டுக்கு எவ்வளவு சாதகமாக இருக்கிறதோ, அதேபோல் தங்கம் விலை உயர்வுக்கும் சாதகமான ஒன்று.
அமெரிக்க டாலர் இருப்பு அதிகளவில் விற்கப்பட்ட காரணத்தால் அதன் மதிப்பு குறைந்து தங்கத்தின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் சீன மத்திய வங்கி உட்பட பல நாட்டின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் வாங்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 250 ரூபாய் உயர்ந்து 87,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 270 ரூபாய் உயர்ந்து 95,670 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து 70,160 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 2000 ரூபாய் உயர்ந்து 1,10,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 140 ரூபாய் குறைந்து 26,160 ரூபாயாக உள்ளது.
இந்த நிலையில், MCX சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.93,887 ஆக உள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.93,940 என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பதிவான ரூ.88,130 ஒப்பிடும் போது இந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.5,757 உயர்ந்துள்ளது
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 70160 ரூபாய், மும்பை - 70160 ரூபாய், டெல்லி - 70280 ரூபாய், கொல்கத்தா - 70160 ரூபாய், பெங்களூர் - 70160 ரூபாய், ஹைதராபாத் - 70160 ரூபாய், கேரளா - 70160 ரூபாய், புனே - 70160 ரூபாய், பரோடா - 70200 ரூபாய், அகமதாபாத் - 70200 ரூபாய், ஜெய்ப்பூர் - 70280 ரூபாய், லக்னோ - 70280 ரூபாய், கோயம்புத்தூர் - 70160 ரூபாய், மதுரை - 70160 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,770 ரூபாய், மும்பை - 8,770 ரூபாய், டெல்லி - 8,785 ரூபாய், கொல்கத்தா - 8,770 ரூபாய், பெங்களூர் - 8,770 ரூபாய், ஹைதராபாத் - 8,770 ரூபாய், கேரளா - 8,770 ரூபாய், புனே - 8,770 ரூபாய், பரோடா - 8,775 ரூபாய், அகமதாபாத் - 8,775 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,785 ரூபாய், லக்னோ - 8,785 ரூபாய், கோயம்புத்தூர் - 8,770 ரூபாய், மதுரை - 8,770 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,567 ரூபாய், மும்பை - 9,567 ரூபாய், டெல்லி - 9,582 ரூபாய், கொல்கத்தா - 9,567 ரூபாய், பெங்களூர் - 9,567 ரூபாய், ஹைதராபாத் - 9,567 ரூபாய், கேரளா - 9,567 ரூபாய், புனே - 9,567 ரூபாய், பரோடா - 9,570 ரூபாய், அகமதாபாத் - 9,570 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,582 ரூபாய், லக்னோ - 9,582 ரூபாய், கோயம்புத்தூர் - 9,567 ரூபாய், மதுரை - 9,567 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,260 ரூபாய், மும்பை - 7,176 ரூபாய், டெல்லி - 7,188 ரூபாய், கொல்கத்தா - 7,176 ரூபாய், பெங்களூர் - 7,176 ரூபாய், ஹைதராபாத் - 7,176 ரூபாய், கேரளா - 7,176 ரூபாய், புனே - 7,176 ரூபாய், பரோடா - 7,180 ரூபாய், அகமதாபாத் - 7,180 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,188 ரூபாய், லக்னோ - 7,188 ரூபாய், கோயம்புத்தூர் - 7,260 ரூபாய், மதுரை - 7,260 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,160 ரூபாய், மும்பை - 26,160 ரூபாய், டெல்லி - 26,160 ரூபாய், கொல்கத்தா - 26,160 ரூபாய், பெங்களூர் - 26,160 ரூபாய், ஹைதராபாத் - 26,160 ரூபாய், கேரளா - 26,160 ரூபாய், புனே - 26,160 ரூபாய், வதோதரா - 26,160 ரூபாய், அகமதாபாத் - 26,160 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,10,000 ரூபாய், மும்பை - 1,00,000 ரூபாய், டெல்லி - 1,00,000 ரூபாய், கொல்கத்தா - 1,00,000 ரூபாய், பெங்களூர் - 1,00,000 ரூபாய், ஹைதராபாத் - 1,10,000 ரூபாய், கேரளா - 1,10,000 ரூபாய், புனே - 1,00,000 ரூபாய், பரோடா - 1,00,000 ரூபாய், அகமதாபாத் - 1,00,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,00,000 ரூபாய், லக்னோ - 1,00,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,10,000 ரூபாய், மதுரை - 1,10,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 37.40 - 8,526 ரூபாய்
குவைத் - KWD 29.68 - 8,324 ரூபாய்
மலேசியா - MYR 450 - 8,746 ரூபாய்
ஓமன் - OMR 38.45 - 8,583 ரூபாய்
கத்தார் - QAR 363 - 8,559 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 367 - 8,402 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 132.80 - 8,652 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 359.75 - 8,418 ரூபாய்
அமெரிக்கா - USD 98 - 8,423 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 359.75 - 8,418 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 359.75 - 8,418 ரூபாய்
துபாய் (UAE) - AED 359.75 - 8,418 ரூபாய்
புஜைரா (UAE) - AED 359.75 - 8,418 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 359.75 - 8,418 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 359.75 - 8,418 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 363 - 8,559 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.45 - 8,583 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 367 - 8,402 ரூபாய்
இங்கிலாந்து - GBP 73.06 - 8,217 ரூபாய்
கனடா - CAD 140 - 8,678 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 160.10 - 8,652 ரூபாய்
நேபாளம் - NPR 14,592.16 - 9,122 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 39.90 - 9,096 ரூபாய்
குவைத் - KWD 32.36 - 9,076 ரூபாய்
மலேசியா - MYR 468 - 9,096 ரூபாய்
ஓமன் - OMR 41.05 - 9,164 ரூபாய்
கத்தார் - QAR 389.50 - 9,183 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 399 - 9,134 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 146.40 - 9,538 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 388.50 - 9,091 ரூபாய்
அமெரிக்கா - USD 104.50 - 8,981 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 388.50 - 9,091 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 388.50 - 9,091 ரூபாய்
துபாய் (UAE) - AED 388.50 - 9,091 ரூபாய்
புஜைரா (UAE) - AED 388.50 - 9,091 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 388.50 - 9,091 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 388.50 - 9,091 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 389.50 - 9,183 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 41.05 - 9,164 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 399 - 9,134 ரூபாய்
இங்கிலாந்து - GBP 79.70 - 8,964 ரூபாய்
கனடா - CAD 148 - 9,174 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 174.70 - 9,441 ரூபாய்
நேபாளம் - NPR 15,861.04 - 9,915 ரூபாய்
சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கத்தின் விலை 3,245 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,236.21 ஆக முடிந்ததுள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு மாற்றத்தினால், டாலரின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு குறையும்போது, தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்பது இயல்பு. அதேபோல, அமெரிக்க அரசின் வரி விதிப்பு 90 நாள் ஒத்திவைப்பு அறிவிப்பினால் டாலர் மதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இது தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் லாபம் ஈட்ட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு, தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு சவாலாக இருந்தாலும், ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு இது லாபகரமான நேரமாக அமைந்துள்ளது. டாலரின் மதிப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளதால், தங்கத்தின் விலை இன்னும் உயரக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications