தங்கம் விலை அமெரிக்க அரசின் வரி விதிப்புக்குப் பின்பு பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது, ஒருப்பக்கம் இந்த வரி சுமையில் இருந்து தப்பிக்க உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகமாக வாங்கி குவித்து வருகிறது.
இதேபோல் அமெரிக்க அரசு அறிவித்துள்ள சில வரி தளர்வுகள் காரணமாகப் பத்திர சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி பங்குச்சந்தையில் முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த 2 நாட்களாகச் சிறிய அளவில் குறைந்து வருகிறது.

ரீடைல் சந்தையில் நேற்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்த நிலையில், இன்று 350 ரூபாய் குறைந்துள்ளது. இது தங்கம் வாங்க திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் என்றால் மிகையில்லை, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தங்கம் விலை கூடுதலாகக் குறைய வாய்ப்புகள் சற்று அதிகமாகவே உள்ளது.
அமெரிக்க அரசு அதிரடியாக உலக நாடுகளைப் பயமுறுத்தும் வகையில் ரெசிப்ரோக்கல் வரிகளை விதித்த நிலையில் வெறும் 2 வார இடைவெளியில் அடுத்தடுத்த அறிவிப்புகள் மூலம் அதைத் திரும்பப் பெற்று வருகிறது. முதல் அறிவிப்பில் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது முழுமையான வரி விலக்கை அறிவித்தது.
தற்போது ஆட்டோமொபைல் துறை மீது அதாவது கார்கள், டிரக்குகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மீதான வரி விதிப்பை குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. இதன் மூலம் முதலீட்டு சந்தையில் கடந்த 2 வாரமாக ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அடுத்த சில நாட்களுக்குக் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் சர்வதேச ஸ்பாட் சந்தையில் இன்று, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அதன் வரலாற்று உச்ச அளவிற்கு அருகிலேயே இருந்தாலும், நேற்றைய விலையை காட்டிலும் சிறிய அளவில் குறைந்து 3,200 டாலர் அளவுக்கு குறைந்துள்ளது.
இதுவே எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் பியூச்சர்ஸ் ஆர்டர் மதிப்பு 0.08 சதவீதம் அதிகரித்து 93,323.00 ரூபாயாக உள்ளது, ஆனால் வெள்ளி விலையில் 0.13 சதவீதம் குறைந்து 94,746 ரூபாயாக உள்ளது.
இந்த நிலையில் இன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 69760 ரூபாய், மும்பை - 69760 ரூபாய், டெல்லி - 69880 ரூபாய், கொல்கத்தா - 69760 ரூபாய், பெங்களூர் - 69760 ரூபாய், ஹைதராபாத் - 69760 ரூபாய், கேரளா - 69760 ரூபாய், புனே - 69760 ரூபாய், பரோடா - 69800 ரூபாய், அகமதாபாத் - 69800 ரூபாய், ஜெய்ப்பூர் - 69880 ரூபாய், லக்னோ - 69880 ரூபாய், கோயம்புத்தூர் - 69760 ரூபாய், மதுரை - 69760 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,720 ரூபாய், மும்பை - 8,720 ரூபாய், டெல்லி - 8,735 ரூபாய், கொல்கத்தா - 8,720 ரூபாய், பெங்களூர் - 8,720 ரூபாய், ஹைதராபாத் - 8,720 ரூபாய், கேரளா - 8,720 ரூபாய், புனே - 8,720 ரூபாய், பரோடா - 8,725 ரூபாய், அகமதாபாத் - 8,725 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,735 ரூபாய், லக்னோ - 8,735 ரூபாய், கோயம்புத்தூர் - 8,720 ரூபாய், மதுரை - 8,720 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,518 ரூபாய், மும்பை - 9,518 ரூபாய், டெல்லி - 9,533 ரூபாய், கொல்கத்தா - 9,518 ரூபாய், பெங்களூர் - 9,518 ரூபாய், ஹைதராபாத் - 9,518 ரூபாய், கேரளா - 9,518 ரூபாய், புனே - 9,518 ரூபாய், பரோடா - 9,523 ரூபாய், அகமதாபாத் - 9,523 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,533 ரூபாய், லக்னோ - 9,533 ரூபாய், கோயம்புத்தூர் - 9,518 ரூபாய், மதுரை - 9,518 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,225 ரூபாய், மும்பை - 7,135 ரூபாய், டெல்லி - 7,147 ரூபாய், கொல்கத்தா - 7,135 ரூபாய், பெங்களூர் - 7,135 ரூபாய், ஹைதராபாத் - 7,135 ரூபாய், கேரளா - 7,135 ரூபாய், புனே - 7,135 ரூபாய், பரோடா - 7,139 ரூபாய், அகமதாபாத் - 7,139 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,147 ரூபாய், லக்னோ - 7,147 ரூபாய், கோயம்புத்தூர் - 7,225 ரூபாய், மதுரை - 7,225 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,210 ரூபாய், மும்பை - 26,210 ரூபாய், டெல்லி - 26,210 ரூபாய், கொல்கத்தா - 26,210 ரூபாய், பெங்களூர் - 26,210 ரூபாய், ஹைதராபாத் - 26,210 ரூபாய், கேரளா - 26,210 ரூபாய், புனே - 26,210 ரூபாய், வதோதரா - 26,210 ரூபாய், அகமதாபாத் - 26,210 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,09,800 ரூபாய், மும்பை - 99,800 ரூபாய், டெல்லி - 99,800 ரூபாய், கொல்கத்தா - 99,800 ரூபாய், பெங்களூர் - 99,800 ரூபாய், ஹைதராபாத் - 1,09,800 ரூபாய், கேரளா - 1,09,800 ரூபாய், புனே - 99,800 ரூபாய், பரோடா - 99,800 ரூபாய், அகமதாபாத் - 99,800 ரூபாய், ஜெய்ப்பூர் - 99,800 ரூபாய், லக்னோ - 99,800 ரூபாய், கோயம்புத்தூர் - 1,09,800 ரூபாய், மதுரை - 1,09,800 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 36.90 - 8,391 ரூபாய்
குவைத் - KWD 29.32 - 8,191 ரூபாய்
மலேசியா - MYR 450 - 8,743 ரூபாய்
ஓமன் - OMR 38.30 - 8,529 ரூபாய்
கத்தார் - QAR 361 - 8,490 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 366 - 8,361 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 132.80 - 8,656 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 360.50 - 8,412 ரூபாய்
அமெரிக்கா - USD 97 - 8,315 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 360.50 - 8,412 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 360.50 - 8,412 ரூபாய்
துபாய் (UAE) - AED 360.50 - 8,412 ரூபாய்
புஜைரா (UAE) - AED 360.50 - 8,412 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 360.50 - 8,412 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 360.50 - 8,412 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 361 - 8,490 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.30 - 8,529 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 366 - 8,361 ரூபாய்
இங்கிலாந்து - GBP 72.12 - 8,154 ரூபாய்
கனடா - CAD 138.50 - 8,555 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 157.80 - 8,599 ரூபாய்
நேபாளம் - NPR 14,536.94 - 9,090 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 39.50 - 8,982 ரூபாய்
குவைத் - KWD 31.97 - 8,932 ரூபாய்
மலேசியா - MYR 467 - 9,074 ரூபாய்
ஓமன் - OMR 40.90 - 9,108 ரூபாய்
கத்தார் - QAR 387 - 9,101 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 396 - 9,046 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 146.20 - 9,529 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 389.50 - 9,088 ரூபாய்
அமெரிக்கா - USD 103.50 - 8,872 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 389.50 - 9,088 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 389.50 - 9,088 ரூபாய்
துபாய் (UAE) - AED 389.50 - 9,088 ரூபாய்
புஜைரா (UAE) - AED 389.50 - 9,088 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 389.50 - 9,088 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 389.50 - 9,088 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 387 - 9,101 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 40.90 - 9,108 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 396 - 9,046 ரூபாய்
இங்கிலாந்து - GBP 78.68 - 8,896 ரூபாய்
கனடா - CAD 146.25 - 9,033 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 172.20 - 9,384 ரூபாய்
நேபாளம் - NPR 15,801.02 - 9,880 ரூபாய்
இறுதியாக தற்போது வர்த்தக போர் என்பது அமெரிக்கா Vs உலக நாடுகள் என்பதில் இருந்து அமெரிக்கா Vs சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போராக மாறியுள்ளது. இதேவேளையில் அமெரிக்க வர்த்தக சந்தை சீன பொருட்களை அதிகம் நம்பியிருக்கும் காரணத்தால் இந்த வர்த்தக போர் அமெரிக்காவில் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை மேம்படுத்தச் செய்யும் டிஜிட்டல் விளம்பரங்களை மொத்தமாக நிறுத்தியுள்ளது. இதனால் அமேசான், கூகுள், பேஸ்புக் போன்ற பிரபலமான விளம்பர நெட்வொர்குகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் அந்நாட்டில் பல பொருட்களின் விலை உயரம் அபாயம் உள்ளது. இதேபோல் சீனாவின் உற்பத்தி, வர்த்தகம் என அனைத்தும் பாதிக்கும் நிலை உள்ளது.
பணவீக்கம் அதிகரித்தால் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (Federal Reserve) தனது நாணயக் கொள்கை அதிரடியாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் தங்கம் விலையும் பாதிக்க கூடும். மார்ச் மாதத்தில் அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தைவிடவும் குறைவாக பதிவாகியுள்ளது. இதனால் ஜூன் மாதம் முதல் பெடரல் ரிசர்வ் வட்டி விகிகத்தை குறைக்க துவங்கும், அதேபோல் இந்த வருடத்தின் இறுதிக்குள் 1 சதவீதம் வரையில் வட்டி விகிதம் குறைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் தற்போதைய சந்தை நிலவரத்தை பார்க்கும் போது பணவீக்கம் ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கும் என தெரிகிறது. இதேவேளையில் அமெரிக்க டாலர் (USD) மதிப்பும் தற்போது பலவீனமான நிலையில் உள்ளது. 10 வருடத்திற்கு பின்பு முன்னணி நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பை அளவிடும் DXY குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழ் உள்ளது.
இவை அனைத்தும் தங்கம் விலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணத்தால் அடுத்த சில வாரத்திற்கு தங்கம் விலையில் அதிகப்படியான ஏற்ற இறக்கம் இருக்கும். எனவே முதலீட்டாளர்கள் திட்டமிட்டு தங்கத்திலும், வெள்ளியிலும் முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications