தங்கம் விலை விறுவிறுவென உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. 2 நாள் சரிவு ஒரே நாளில் மீண்டது!!

தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் நாணய மதிப்பின் மாற்றம் காரணமாகத் தடாலடியாக உயர்ந்துள்ளது. புதன்கிழமை காலை MCX சந்தையில் தங்கம் விலை புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது சாமானிய மக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நேற்றைய வர்த்தகத்தில் நிலையான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்த தங்கம் இன்று ஆசிய சந்தை வர்த்தகத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சீனா பொருளாதாரம், வர்த்தகம் 2025ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் சந்தை கணிப்புகளையும் தாண்டி 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்க பியூச்சர்ஸ் சந்தையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதேபோல் அமெரிக்கப் பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளை நேற்றைய வர்த்தகத்தில் சரிவுக்குத் தள்ளியுள்ளது.

தங்கம் விலை விறுவிறுவென உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. 2 நாள் சரிவு ஒரே நாளில் மீண்டது!!

இதன் எதிரொலியாக இன்று காலையில் ஆசிய பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் துவங்கும் போது சரிவுடன் துவங்கியது, இதேபோல் அமெரிக்காவில் ஏஐ சிப்-களை சீனா உட்பட சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இனி என்விடியா, ஏஎம்டி ஆகியவை சிறப்பு அனுமதியை அமெரிக்க அரசிடம் இருந்து பெற வேண்டும் என அறிவிக்கப்பட்ட காரணத்தால் நேற்று டெக் நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தது.

இப்படி பல காரணத்தால் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை பாதுகாக்கும் பொருட்டு தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கினர். அமெரிக்க சந்தையின் வர்த்தக நேர முடிவில் இருந்து உயர துவங்கிய தங்கம் விலை ஆசிய சந்தையின் வர்த்தக துவக்கத்தில் அதிரடியாக உயர்ந்தது. இதனால் சர்வதேச ஸ்பாட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 3240 டாலரில் இருந்து தற்போது 3284 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இதன் தாக்கம் எம்சிஎக்ஸ் சந்தையிலும் எதிரொலித்துள்ளது, இன்று காலை வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 94,573 ஆக உயர்ந்தது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) புதன்கிழமை, ஏப்ரல் 16 ஆம் தேதி ஆரம்ப வர்த்தகத்தில் தங்கம் விலை 1,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் விரைவில் 100000 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 950 ரூபாய் உயர்ந்து 88,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 990 ரூபாய் உயர்ந்து 96,170 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 760 ரூபாய் உயர்ந்து 70,520 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து 1,10,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 30 ரூபாய் உயர்ந்து 26,240 ரூபாயாக உள்ளது.

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் அமெரிக்கப் பத்திர சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் வெளியேறத் துவங்கியுள்ள காரணத்தால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது.

காமெக்ஸ் தங்கம் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்து ஒரு டிராய் அவுன்ஸுக்கு 3,294.60 டாலரை எட்டியது. டிரம்ப் துவங்கி வைத்த வர்த்தகப் போர் தற்போது உலக பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+