சில நாட்களாகவே தங்கம் விலை படு பயங்கரமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏப்ரல் 19-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் மாற்றம் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்க சந்தைகள் மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக தங்கம் விலையில் அவ்வளவாக மாற்றம் இருக்காது. இந்த பதிவில் இன்றைய தங்கம் விலை நிலவரம் மற்றும் இந்த மாதம் முழுவதும் தங்கம் எப்படி விற்பனையானது? என்ற விவரங்களை பார்ப்போம்.
இன்றைய (19/04/2025) தங்கம் விலை நிலவரம்: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,945-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 71,560-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் 89,450-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9,758 க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.78,064-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.97,580க்கும் விற்பனையாகிறது.

கடந்த 10 நாட்களில் ஏப்ரல் 15 மற்றும் ஏப்ரல் 14 ஆகிய தேதிகளில் மட்டும் தான் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. ஏப்ரல் 15-ஆம் தேதி அன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்திருந்தது. ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்திருந்தது.
மற்ற தினங்களில் எல்லாம் விலை உயர்வு மட்டும் தான் காணப்பட்டது. அதேபோல கடந்த 10 தினங்களில் அதிகபட்சமாக ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 270 ரூபாய் அதிகரித்தது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 294 ரூபாய் அதிகரித்திருந்தது.
ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து ஏப்ரல் 19-ஆம் தேதியான இன்றைய நாள் வரை அதிகபட்சமாக ஏப்ரல் 18-ஆம் தேதி அன்று 1 கிராம் 22 கேரட் 8,945 ரூபாயை எட்டியது. 1 கிராம் 24 கேரட் தங்கம் 9758 ரூபாய்க்கு விற்பனையானது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை 5.11 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது.
2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் பிறந்தது முதல் தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. டிசம்பர் மாதத்தில் அதற்கு முந்தைய மாதமான நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தங்கம் விலை 0.56 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. ஆனால் ஜனவரி மாதம் பிறந்ததுமே டிசம்பருடன் ஒப்பிடுகையில் 8.11 சதவீதம் தங்கம் விலை அதிகரிப்பை கண்டது.
பிப்ரவரி மாதம் சற்று குறைந்து 2.78% வரை விலை உயர்ந்திருந்தது. மார்ச் மாதம் பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 6.11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதே நிலைதான் இந்த ஏப்ரல் மாதத்திலும். அதுவும் இந்த மாதம் முடிவதற்கு இன்னும் பத்து தினங்கள் இருப்பதால் மார்ச் மாதத்தை விட இந்த மாதமும் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையிலேயே நிபுணர்கள் கணித்தது போல 1 சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications