தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை! 2 நாளில் ரூ.2480 குறைவு! 1 கிராம் ரூ.9,005-க்கு விற்பனை!

ஏப்ரல் 24-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்று சவரனுக்கு ரூ. 2,400 குறைந்திருந்த நிலையில் இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்திருக்கிறது. ஏப்ரல் மாதம் பிறந்ததிலிருந்து தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 10,135 என்ற உச்ச விலையை எட்டியது. கடந்த 10 தினங்களில் ஏப்ரல் 17, ஏப்ரல் 18, ஏப்ரல் 21, ஏப்ரல் 22 ஆகிய தேதிகளில் எல்லாம் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்க தான் செய்தது. இந்நிலையில் நேற்றைய தினம் கிராமுக்கு 300 ரூபாய் குறைந்தது.

தங்கம் விலை குறைந்தால் புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும். அதுவே தங்கம் விலை உயர்ந்தால் ஏற்கனவே தங்கத்தை ஒரு முதலீடாகக் கருதி வாங்கி வைத்தவர்களுக்கு நன்மையளிக்கும். ஏனெனில் தாங்கள் வாங்கியவர்களுக்கு தங்கத்தின் மதிப்பு உயர்வது நல்லது தானே!

தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தங்கம் விலை! 2 நாளில் ரூ.2480 குறைவு! 1 கிராம் ரூ.9,005-க்கு விற்பனை!

தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மத்திய மாநில அரசு வரி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, புவிசார் அரசியல் பதற்றங்கள் என பல்வேறு காரணிகளைப் பொறுத்து தான் தங்கத்தின் விலை அமையும்.

வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு மாதிரியான விலையில் தங்கம் விற்பனையாவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு காரணம் அந்தந்த மாநில அரசுகளின் வரி. இது அதிகமாக இருந்தால் அங்கு விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலையும் அதிகமாக இருக்கலாம். அதே போல ஒரு மாநிலத்தில் வரி குறைவாக இருந்தால், அங்கு விற்க்கப்படும் தங்கத்தின் விலையும் குறைவாக இருக்கலாம். இதனால் தான் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு விலையில் தங்கம் விற்பனையாகிறது.

தங்கத்தின் மதிப்பு கேரட்டில் அளவிடப்படுகிறது. 22 கேரட், 18 கேரட், 24 கேரட் போன்றவற்றில் தங்கம் வாங்கலாம். 22 கேரட் தங்கம் 91.6 சதவீதம் தூய தங்கத்தை கொண்டது. இதைத்தான் 916 தங்கம் என்று கூறுவார்கள். இந்த தங்கத்துடன் பிற உலோகங்களான சில்வர் மற்றும் காப்பர் கலந்து நகைகள் செய்யப்படும். ஆனால் 24 கேரட் தங்கம் என்பது தூய தங்கம். இதில் 99.9% தூய தங்கம் இருக்கும். இதை வைத்து கோல்ட் காயின்கள் மற்றும் கோல்ட் பார்கள் செய்யலாம். ஏனெனில் தங்கம் மிகவும் மிருதுவான உலோகம். அதை வளைத்து, முறுக்கி நகைகள் செய்ய முடியாது. இதனால் தான் 22 கேரட் தங்கத்தில் காப்பர், சில்வர் கலந்து நகைகள் செய்யப்படுகிறது. இன்றைய பதிவில் வெவ்வேறு ஊர்களில் தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72040 ரூபாய், மும்பை - 72040 ரூபாய், டெல்லி - 72160 ரூபாய், கொல்கத்தா - 72040 ரூபாய், பெங்களூர் - 72040 ரூபாய், ஹைதராபாத் - 72040 ரூபாய், கேரளா - 72040 ரூபாய், புனே - 72040 ரூபாய், பரோடா - 72080 ரூபாய், அகமதாபாத் - 72080 ரூபாய்,

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,005 ரூபாய், மும்பை - 9,005 ரூபாய், டெல்லி - 9,020 ரூபாய், கொல்கத்தா - 9,005 ரூபாய், பெங்களூர் - 9,005 ரூபாய், ஹைதராபாத் - 9,005 ரூபாய், கேரளா - 9,005 ரூபாய், புனே - 9,005 ரூபாய், பரோடா - 9,010 ரூபாய், அகமதாபாத் - 9,010 ரூபாய்,

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,824 ரூபாய், மும்பை - 9,824 ரூபாய், டெல்லி - 9,834 ரூபாய், கொல்கத்தா - 9,824 ரூபாய், பெங்களூர் - 9,824 ரூபாய், ஹைதராபாத் - 9,824 ரூபாய், கேரளா - 9,824 ரூபாய், புனே - 9,824 ரூபாய், பரோடா - 9,829 ரூபாய், அகமதாபாத் - 9,829 ரூபாய்,

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,460 ரூபாய், மும்பை - 7,368 ரூபாய், டெல்லி - 7,380 ரூபாய், கொல்கத்தா - 7,368 ரூபாய், பெங்களூர் - 7,368 ரூபாய், ஹைதராபாத் - 7,368 ரூபாய், கேரளா - 7,368 ரூபாய், புனே - 7,368 ரூபாய், பரோடா - 7,372 ரூபாய், அகமதாபாத் - 7,372 ரூபாய்,

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,700 ரூபாய், மும்பை - 26,700 ரூபாய், டெல்லி - 26,700 ரூபாய், கொல்கத்தா - 26,700 ரூபாய், பெங்களூர் - 26,700 ரூபாய், ஹைதராபாத் - 26,700 ரூபாய், கேரளா - 26,700 ரூபாய், புனே - 26,700 ரூபாய், வதோதரா - 26,700 ரூபாய், அகமதாபாத் - 26,700 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,10,900 ரூபாய், மும்பை - 1,00,900 ரூபாய், டெல்லி - 1,00,900 ரூபாய், கொல்கத்தா - 1,00,900 ரூபாய், பெங்களூர் - 1,00,900 ரூபாய், ஹைதராபாத் - 1,10,900 ரூபாய், கேரளா - 1,10,900 ரூபாய், புனே - 1,00,900 ரூபாய், பரோடா - 1,00,900 ரூபாய், அகமதாபாத் - 1,00,900 ரூபாய்,

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 37.80 - 8,583 ரூபாய்
குவைத் - KWD 30.06 - 8,400 ரூபாய்
மலேசியா - MYR 470 - 9,171 ரூபாய்
ஓமன் - OMR 38.80 - 8,627 ரூபாய்
கத்தார் - QAR 369.50 - 8,678 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 374 - 8,536 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 136.50 - 8,888 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 368 - 8,576 ரூபாய்
அமெரிக்கா - USD 99.50 - 8,518 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 368 - 8,576 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 368 - 8,576 ரூபாய்
துபாய் (UAE) - AED 368 - 8,576 ரூபாய்
புஜைரா (UAE) - AED 368 - 8,576 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 368 - 8,576 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 368 - 8,576 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 369.50 - 8,678 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.80 - 8,627 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 374 - 8,536 ரூபாய்
இங்கிலாந்து - GBP 73.96 - 8,405 ரூபாய்
கனடா - CAD 141.25 - 8,719 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 164.30 - 8,940 ரூபாய்
நேபாளம் - NPR 15,018.09 - 9,388 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 40.30 - 9,151 ரூபாய்
குவைத் - KWD 32.76 - 9,155 ரூபாய்
மலேசியா - MYR 485 - 9,464 ரூபாய்
ஓமன் - OMR 41.50 - 9,227 ரூபாய்
கத்தார் - QAR 396.50 - 9,312 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 406 - 9,266 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 150 - 9,767 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 397.25 - 9,258 ரூபாய்
அமெரிக்கா - USD 105.75 - 9,053 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 397.25 - 9,258 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 397.25 - 9,258 ரூபாய்
துபாய் (UAE) - AED 397.25 - 9,258 ரூபாய்
புஜைரா (UAE) - AED 397.25 - 9,258 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 397.25 - 9,258 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 397.25 - 9,258 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 396.50 - 9,312 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 41.50 - 9,227 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 406 - 9,266 ரூபாய்
இங்கிலாந்து - GBP 80.68 - 9,168 ரூபாய்
கனடா - CAD 149 - 9,197 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 179.20 - 9,751 ரூபாய்
நேபாளம் - NPR 16,324.01 - 10,205 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+