ஏப்ரல் 25-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. நேற்றைய முன் தினம் சவரனுக்கு ரூ.2,400 குறைந்த தங்கம் விலை, இன்றைய தினம் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. அதேபோல நேற்றும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்திருந்தது.
ஏப்ரல் மாதம் பிறந்ததிலிருந்து தடாலடியாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதற்கு சான்றாய் ஏப்ரல் 22-ஆம் தேதி கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து நகை பிரியர்களுக்கு ஷாக் தந்தது. இதனால் அன்றைய தினம் 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாற்று உச்சத்தை எட்டியது. ஏப்ரல் 21 ஆம் தேதியும் கிராமுக்கு 77 ரூபாய் அதிகரித்தது. பொதுவாக தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருக்கிறது. தங்கம் உயர்ந்தாலும் சரி குறைந்தாலும் சரி அது குறிப்பிட்ட பிரிவினருக்கு நன்மை அளிக்கும்.

ஆனால் மாத மாதம், சிறுக சிறுக நகை வாங்கும் குடும்பங்களுக்கு தான் தற்போது பிரச்சனை. ஏனெனில் ஜனவரி மாதம் தொடங்கிய போது 7,000-த்திற்கு விற்கப்பட்ட 1 கிராம், தற்போது ரூ.9,000-த்தை நெருங்கியிருக்கிறது. ஏற்கனவே தங்கம் வாங்கியவர்களுக்கு இது சாதகமாக இருந்தாலும், தங்கள் குழந்தைகளுக்காக நகை சேர்க்க வேண்டும், அவர்களின் படிப்புக்காக நகை சேர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வு சற்று சிக்கலை தான் ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய முன் தினம் தங்கம் விலை குறைந்திருந்தாலும், மேலும் விலை குறைய வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்றைய தங்கம் விலை (25/04/2025) நிலவரம்: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 9,005-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 72,040-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 90,050-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9,824-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 78,592-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 98,240-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் 18 கேரட் தங்கம் 7,460-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 59,680-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 74,600-க்கும் விற்பனையாகிறது.
மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தின் 1-ஆம் தேதி முதல் இன்றைய தினம் வரை 5.82% தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக ஏப்ரல் 22ஆம் தேதி 1 கிராம் 22 கேரட் 9,290-க்கு விற்பனையானது. இனிவரும் காலங்களில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications