மார்ச் 26-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்றைய தினம் தங்கம் விலையில் மாற்றமில்லை. அதற்கு முன் தினம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்திருந்தது. ஏப்ரல் 23-ஆம் தேதி அதிகபட்சமாக சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது. பொதுவாக ஏதேனும் பண்டிகை காலம் ஏற்பட்டால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும்.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 30-ஆம் தேதியன்று அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்குவது அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்பைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. இதனால் ஒரு கிராமவாவது தங்கம் வாங்க வேண்டும் என்று மக்கள் எண்ணுவர். அப்படி இருக்கையில் அன்றைய தினம் டிமாண் அதிகரித்து தங்கம் விலை உயர்வதற்கும் வாய்ப்புண்டு.

இன்றைய தங்கம் விலை (26/04/2025) நிலவரம்: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 3 ரூபாய் குறைந்து ரூ.9,002-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் 24 ரூபாய் குறைந்து ரூ. 72,016-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து ரூ. 90,020-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் 3 ரூபாய் குறைந்து ரூ.9,821-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் 24 ரூபாய் குறைந்து ரூ. 78,568-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து ரூ. 98,210-க்கும் விற்பனையாகிறது.
18 கிராம் தங்க விலையில் இன்றைய தினம் மாற்றம் ஏதுமில்லை. நேற்றைய விலையில் தான் என்றும் விற்பனையாகிறது. ஒரு கிராம் 18 கேரட் தங்கம் 7,460-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 59,680-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 74,600-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 4 தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் இந்த விலைக் குறைவும் போதவில்லை, இன்னமும் குறைய வேண்டும் என்பதுதான் புதிதாக நகை வாங்க இருப்பவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று 8,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிராம் 22 கேரட், தற்போது 500 ரூபாய் அதிகரித்து ரூ. 9,000-த்தை நெருங்கியிருக்கிறது.
2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதியன்று, 1 கிராம் 22 கேரட் ரூ. 7,150-க்கும், 1 கிராம் 24 கேரட் ரூ. 7,800-க்கும் விற்பனையானது. ஆனால் இன்றைய தினம் விலையை சற்று யோசித்துப் பாருங்கள். வெறும் 4 மாதங்களில் 2000 ரூபாய் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 22-ஆம் தேதியன்று 10 கிராம் தங்கம் ரூ.1 லட்சம் என்ற இலக்கை எட்டியது. இனிவரும் காலங்களிலும் இதே போல தங்கம் விலை உயர்வை எட்டுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications